சாதாரணதரப் பரீட்சையில் திறமைச் சித்திபெற்ற சுன்னாகம் மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள்: வீடுகள் தேடிச் சென்று வழங்கி வைப்பு (Photos)

கல்விப் பொதுச் சாதாரணதரப் பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் திறமைச் சித்திகள் பெற்ற யாழ்.சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த மாணவ- மாணவிகளிற்கு டென்மார்க்கில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் திருமதி- சிவனேஸ்வரி மகேந்திரனின் நிதிப் பங்களிப்பில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

வலிகாமம் தெற்குப் பிரதேசசபை உறுப்பினர் சமூகதிலகம் லயன் பாலசிங்கம் சுரேஸ்குமார் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26.09.2021) மாணவ-மாணவிகளின் வீடுகளிற்கு நேரில் தேடிச் சென்று மேற்படி கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.

இதேவேளை,குறித்த நிகழ்வில் பாலசிங்கம் சுரேஸ்குமாருடன் சுன்னாகம் ஐயனார் ஆலய ஆதீனகர்த்தா வா.தர்சிகன், பளை மத்திய கல்லூரியின் ஆசிரியர் ப.நிசாந்தன், கு.கயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

(செய்தித் தொகுப்பு:-செ. ரவிசாந்)