அரிசி வகைகளுக்கான புதிய விலைகள் அறிவிப்பு!

பாரிய அரிசி ஆலைகள் உரிமையாளர்கள் அரிசி வகைகளுக்கான சில்லறை விலைகளை அறிவித்துள்ளனர்.

இதன்படி, ஒரு கிலோ நாட்டரிசி 115 ரூபாவுக்கும், ஒரு கிலோ சம்பா அரிசி 140 ரூபாவுக்கும், ஒரு கிலோ கீரி சம்பா அரிசி விலை 165 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோக் கிராம் நாடு நெல்லை 62 ரூபா 50 சதத்திற்கு கொள்வனவு செய்யவுள்ளதாகவும், ஒரு கிலோக் கிராம் சம்பா நெல்லை 70 ரூபாவிற்கும், ஒரு கிலோக் கிராம் கீரி சம்பா நெல்லை 80 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யவுள்ளதாகப் பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை,அரிசிக்கான கட்டுப்பாட்டு விலைகளை நிர்ணயித்துக் கடந்த-2 ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்ய அமைச்சரவை நேற்றுத் தீர்மானித்திருந்தது. ஒருகிலோ நாட்டரிசி விலையை 98 ரூபாவாகவும், சம்பா அரிசியின் விலையை 103 ரூபாவாகவும், கீரி சம்பாவின் விலையை 125 ரூபாவாகவும் கட்டுப்பாட்டு விலைகளாக நிர்ணயித்து குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்த மையும் இங்கு குறிப்பிடத்தக்கது.