புத்தாக்க அரங்க இயக்கத்தின் இணையவழிப் பன்னாட்டு அரங்க கதையாடல்

புத்தாக்க அரங்க இயக்கம்  நடாத்தும்  இணையவழிப் பன்னாட்டு அரங்க கதையாடல்-03 நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை(28.092.2021) முதல் எதிர்வரும்-30 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக மூன்று தினங்களுக்கு  இரவு-7 மணியளவில் புத்தாக்க அரங்க இயக்கத்தின்  பணிப்பாளர் எஸ்.ரி.குமரன் தலைமையில் இடம் பெறவுள்ளது.

அந்தவகையில் இன்று செவ்வாய்க்கிழமை(28.09.2021)லண்டன் அவைக்காற்றுக் கலைக் கழகத்தின் க.பாலேந்திரா,  ஆனந்தராணி பாலேந்திரா ‘யுகதர்மம் நாடக அனுபவம்’ எனும் தலைப்பிலும்,  நாளை புதன்கிழமை(29.09.2021)    கிழக்குப் பல்கலைக்கழகச் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் க.மோகனதாசன் ‘ஆன்ம நித்தியவாதமும் சமகால நாடக கதைக்களங்களும்’, நாளை மறுதினம்  வியாழக்கிழமை (30.09.2021) சென்னை மாநிலக் கல்லூரி( தன்னாட்சி) முனைவர் பட்ட ஆய்வாளர் இரா.சிலம்பரசன் ‘தமிழகத்தில் தெருக் கூத்துக் கலைஞர்களின் வாழ்வியலும்  கள ஆய்வு அனுபவமும்’ ஆகிய விடயங்களில் கதையாடவுள்ளார் .

ஏற்புரையினைப் புத்தாக்க அரங்க இயக்கத்தின் நிர்வாகப் பணிப்பாளர் எஸ்.ரி.அருள்குமரன் வழங்கவுள்ளார்.

இதேவேளை,மேற்படி இணையவழி அரங்க கதையாடல்  நிகழ்வில் ஆர்வமுடையவர்களைச் சூம் செயலி இலக்கம் 647334 8261, கடவுச் சொல் ITM ஊடாக இணைந்து கொள்ளுமாறு புத்தாக்க அரங்க இயக்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

(செ. ரவிசாந்)