யாழ்.மாநகரசபையில் திலீபனுக்கு அஞ்சலி (Photo)

யாழ்.மாநகரசபையின் மாதாந்த அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை(28.09.2021) யாழ்.மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் சபை மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது சபை அமர்வின் ஆரம்பத்தில் தியாகதீபம் திலீபனின் 34 ஆவது ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு மாநகரசபையின் ஈபிடிபி உறுப்பினர்கள் தவிர்ந்த யாழ்மாநகரசபை முதல்வர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று இரண்டுநிமிட மெளன அஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை,தியாகதீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட நிகழ்வில் ஈழமக்கள் ஜனநாயக கட்சி கலந்து கொள்ளவில்லை.

(செய்தித் தொகுப்பு:-செ.ரவிசாந்)