தகவல் அறியும் உரிமையும் பொதுமக்களின் எதிர்காலமும்: இணையவழியில் இன்று கலந்துரையாடல்

இன்று செவ்வாய்க்கிழமை(செப்டம்பர்-28) நினைவு கூறப்படும் சர்வதேச தகவல் அறியும் தினம் மற்றும் இலங்கையில் தகவலுக்கான உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு 05 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு இன்றைய தினம் இணையவழியில் கலந்துரையாடல் நடாத்தப்படவுள்ளது.

“தகவல் அறியும் உரிமையும் பொதுமக்களின் எதிர்காலமும்” எனும் தலைப்பில் இன்று பிற்பகல்-05 மணி தொடக்கம் இரவு-07 மணி வரை சூம் செயலி ஊடாக குறித்த கலந்துரையாடல் இடம்பெறும்.

டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா நிறுவனத்தின்(Transparency International- Srilanka) சமூகத்துறை மற்றும் பிராந்தியக் கிளைகள் தலைவர் கெளரீஸ்வரனின் நெறிப்படுத்தலில் இடம்பெறவுள்ள குறித்த கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி த.சத்தியமூர்த்தி, குச்சவெளிப் பிரதேச செயலர் கே.குணநாதன், நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் ஜவாஹிரா, டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சித் திட்ட அலுவலர் பிரியா போல்ராஜ் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

குறித்த கலந்துரையாடலில் சூம் செயலி ஊடாக ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் இணைந்து கொள்வதுடன் உங்கள் RTI தொடர்பான விடயங்களையும் கேட்டறிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேற்படி கலந்துரையாடலில் இணைந்து கொள்வதற்கான Meeting ID : 983 6725 3275, Pass Code : 900928 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

(செய்தித் தொகுப்பு:- செ. ரவிசாந்)