இன்று முதல் தொடர்ந்தும் நான்கு நாட்களுக்குப் பன்னாட்டு அரங்க கதையாடல்

புத்தாக்க அரங்க இயக்கம் நடாத்தும் இணையவழிப் பன்னாட்டு அரங்க கதையாடல்-04 நிகழ்வு இன்று தொடக்கம் எதிர்வரும்-07 ஆம் திகதி வரை இரவு-07 மணியளவில் புத்தாக்க அரங்க இயக்கத்தின் பணிப்பாளர் எஸ்.ரி.குமரன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்வுகளின் வரிசையில் இன்று திங்கட்கிழமை (04.10.2021)பேராசிரியர் அ.மங்கை (தமிழ்நாடு ,இந்தியா) ‘ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு’ எனும் தலைப்பிலும், நாளை செவ்வாய்க்கிழமை (05.10.2021)பா.வை.ஜெயபாலன்(லண்டன்) ‘நாடகத்துறையில் மாணவர்களை ஊக்கப்படுத்துவதில் மகாஜனாக்கல்லூரியின் பங்கு’ எனும் தலைப்பிலும், நாளை மறுதினம் புதன்கிழமை (06.10.2021) கிழக்குப் பல்கலைக்கழகம்(இலங்கை) சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் நடன, நாடகத்துறை தலைவர் கலாநிதி-ஜெயரஞ்சினி ஞானதாஸ் ‘அரங்கு வேரைப் பலப்படுத்தலும் உலகுடன் கலத்தலும்’ எனும் தலைப்பிலும், எதிர்வரும் வியாழக்கிழமை(07.10.2021) புதுவைப் பல்கலைக்கழக நிகழ்கலைப் பள்ளி மேனாள் புல முதன்மையாளர், நிறுவுனர் மற்றும் தலைக்கோல் நாடகக் குழு நிறுவுனர், இயக்குநர் கருஞ்சுழி முனைவர் வ.ஆறுமுகம் (தமிழ்நாடு,இந்தியா)’நடிகர்களுக்கு அனுமதி இல்லை’, ‘நாடக அரங்க ஆக்க அனுபவங்கள்’ ஆகிய விடயங்களில் கதையாடவுள்ளார்.

புத்தாக்க அரங்க இயக்கத்தின் நிர்வாகப் பணிப்பாளர் எஸ்.ரி.அருள்குமரன் ஏற்புரையினை வழங்கவுள்ளார்.

இதேவேளை, இவ் இணையவழி அரங்க கதையாடல் நிகழ்வில் ஆர்வமுடையவர்களைச் சூம் செயலி இலக்கம் 647334 8261, கடவுச் சொல் ITM ஊடாக இணைந்து கொள்ளுமாறு புத்தாக்க அரங்க இயக்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

(செ. ரவிசாந்)