புத்தாக்க அரங்க இயக்கத்தின் இணையவழிப் பன்னாட்டு அரங்க கதையாடல் இன்று ஆரம்பம்

புத்தாக்க அரங்க இயக்கம் நடத்தும் இணையவழிப் பன்னாட்டு அரங்க கதையாடல்-05 நிகழ்வு இன்று திங்கட்கிழமை(11.10.2021) தொடக்கம் எதிர்வரும்-14 ஆம் திகதி வரை இரவு-07.30 மணியளவில் புத்தாக்க அரங்க இயக்கத்தின் பணிப்பாளர் எஸ்.ரி.குமரன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

மேற்படி நிகழ்வின் வரிசையில் இன்று திங்கட்கிழமை(11.10.2021) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைக்கழக இசைத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி. சுகன்யா அரவிந்தன் ‘நாடக ஆளுமைகளுக்கான இசை அனுபவம்’ எனும் தலைப்பிலும், நாளை செவ்வாய்க்கிழமை (12.10.2021) கலைவளரி ஏ.ஜி.யோகராஜா (சுவிஸ்)’எனது நாடக எழுத்துருக்களும் நானும் ஓர் அனுபவப்பகிர்வு’ எனும் தலைப்பிலும், நாளை மறுதினம் புதன்கிழமை(13.10.2021) பேராசிரியர் சி.மௌனகுரு(இலங்கை)’எனது அரங்கு என்ன அரங்கு’எனும் தலைப்பிலும், எதிர்வரும் வியாழக்கிழமை(14.10.2021 இரா.சிலம்பரசன்(தமிழ்நாடு இந்தியா) ‘தமிழகத்தில் தெருக்கூத்து மரபுகள்’ எனும் தலைப்பிலும் கதையாடவுள்ளனர்.

ஏற்புரையினைப் புத்தாக்க அரங்க இயக்கத்தின் நிர்வாகப் பணிப்பாளர் எஸ்.ரி.அருள்குமரன் வழங்கவுள்ளார்.

இதேவேளை, இவ் இணையவழி அரங்க கதையாடல் நிகழ்வில் ஆர்வமுடையவர்களை சூம் செயலி இலக்கம் 647334 8261, கடவுச் சொல் ITM ஊடாக இணைந்து கொள்ளுமாறு புத்தாக்க அரங்க இயக்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

(செ. ரவிசாந்)