குப்பிழானில் மானம்பூத் திருவிழாவும் கெளரி விரத ஆரம்ப நிகழ்வும்

யாழ்.குப்பிழான் வீரமனை கன்னிமார் கெளரி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த நவராத்திரி விழாவின் மானம்பூத் திருவிழாவும் கேதார கெளரி விரத ஆரம்ப நிகழ்வும் நாளை வெள்ளிக்கிழமை (15.10.2021) இடம்பெறவுள்ளது.

நாளை காலை-09 மணியளவில் மானம்பூத் திருவிழா இடம்பெறுவதைத் தொடர்ந்து முற்பகல்-10 மணியளவில் வருடாந்தக் கேதார கெளரி விரத பூசை வழிபாடுகள் சங்கல்பத்துடன் ஆரம்பமாகும். தொடர்ந்தும் 21 தினங்கள் கேதார கெளரி விரத பூசை வழிபாடுகள் நடைபெறும்.

இதேவேளை, கேதார கெளரி விரத பூசை வழிபாடுகளில் கலந்து கொள்ளும் அடியவர்கள் யாவரும் கொரோனாத் தொற்றுச் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றிக் கலந்து கொள்ளுமாறு மேற்படி ஆலயப் பிரதமகுரு கிரியாகலாபாமணி சிவஸ்ரீ. சி. கிருஷ்ணசாமிக் குருக்கள் அடியவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)