நல்லூரில் பக்திபூர்வமாக இடம்பெற்ற மானம்பூ உற்சவம் (Photos)

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த நவராத்திரி விஜயதசமித் திருநாளையொட்டிய மானம்பூ உற்சவம் இன்று வெள்ளிக்கிழமை (15.10.2021) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.

இன்று காலை-06.45 மணிக்கு வசந்த மண்டப பூசையுடன் திருவிழா ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து பழைமையான சிறிய குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி அமைதியான முறையில் மானம்பூ உற்சவம் நடந்தேறியது.