தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தில் கேதாரகெளரி விரத வழிபாடுகள்: இன்று ஆரம்பம்

வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய வருடாந்தக் கேதார கெளரி விரத பூசை வழிபாடு இன்று வெள்ளிக்கிழமை(15.10.2021) முற்பகல்-10 மணியளவில் சங்கல்பத்துடன் ஆரம்பமாகும் என மேற்படி ஆலயத் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்தார்.

தொடர்ந்தும் 21 தினங்கள் இவ்வாலயத்தில் கெளரி விரத பூசை வழிபாடுகள் இடம்பெறும்.

இதேவேளை, பன்னெடுங் காலமாக துர்க்காதேவி ஆலயத்தில் கேதார கெளரி விரத பூசை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு:-செ.ரவிசாந்)