சாயி பாபாவின் அவதார தினத்தை முன்னிட்டு வண்ண மின்விளக்குகளால் ஒளிர்ந்த யாழ்ப்பாணம் சாயி நிலையம்(Video, Photos)

திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சத்தியசாயி சேவா நிலையத்தின் ஏற்பாட்டில் பகவான் ஸ்ரீ சத்தியசாயி பாபாவின் 96 ஆவது அவதார தின விழா நேற்றுச் செவ்வாய்க்கிழமை(23.11.2021) நிலைய மண்டபத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

இதனை முன்னிட்டு யாழ்ப்பாணம் சத்தியசாயி சேவா நிலையம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை(22)இரவும்,நேற்றுச் செவ்வாய்க்கிழமை(23) இரவும் வண்ண மின்விளக்குகளுக்கு மத்தியில் அழகொளிரக் காட்சியளித்ததுடன் நிலையச் சூழல் விழாக் கோலம் பூண்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு:-செ.ரவிசாந்)