குப்பிழான் சொக்கவளவு சோதி விநாயகர் ஆலயத்தில் பெருங்கதை விரத உற்சவம்

குப்பிழான் சொக்கவளவு சோதி விநாயகர் ஆலய வருடாந்தப் பெருங்கதை விரத உற்சவம் கடந்த சனிக்கிழமை(20.11.2021) பிற்பகல் ஆரம்பமாகித் தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது.

இவ்வாலயப் பெருங்கதை விரத உற்சவ நாட்களில் தினமும் முற்பகல்-10 மணியளவில் அபிஷேகம் பூசைகளுடன் ஆரம்பமாகி இடம்பெற்று வருவதுடன் தொடர்ந்து பெருங்கதைப் படிப்பும் நடைபெறும் என மேற்படி ஆலய நிர்வாக சபையின் தலைவர் கந்தையா சிவகுமார் தெரிவித்துள்ளார்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)