கிளிநொச்சி கோர விபத்தில் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தாருக்கு உரும்பிராய் உதவும் நண்பர்கள் அமைப்பினர் உதவி(Photo)

கடந்த 15.11.2021 அன்று கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு முன்பாக நடந்த கோர விபத்தில் உயிரிழந்த கிளிநொச்சி ஊற்றுப்புலம் பகுதியைச் சேர்ந்த க.பொ.த. உயர்தர மாணவி திருவாசகம்.மதுசாளினியின் குடும்பத்தாருக்கு உரும்பிராய் உதவும் நண்பர்கள் அமைப்பினரால் உதவு தொகை வழங்கி வைக்கப்பட்டது.

தற்போது புலம்பெயர்ந்து பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் மேற்படி அமைப்பின் உறுப்பினர் நடராஜா மதன்ராஜ்ஜின் 25, 000 ரூபா நிதிப் பங்களிப்பினை நேற்று வியாழக்கிழமை(02.12.2021) உரும்பிராய் உதவும் நண்பர்கள் அமைப்பினர் மேற்படி மாணவியின் குடும்பத்தாருக்கு வீடு தேடிச் சென்று வழங்கி வைத்தனர்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)