இளவாலையில் இரத்ததான முகாம்: 25 பேர் ஆர்வத்துடன் குருதிக்கொடை(Video, Photos)

 

யாழ்.மாவட்டத்தில் தற்போது நிலவும் இரத்தத் தட்டுப்பாட்டினைக் கருத்திற் கொண்டு இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பு அன்னபூரணி அமைப்பின் அனுசரணையில் இரத்ததான முகாம் நிகழ்வு இன்று சனிக்கிழமை(04.12.2021) காலை-09 மணி முதல் பிற்பகல்-02 மணி வரை இளவாலை நாவலடிச் சந்தியில் உள்ள கலைமகள் படிப்பகத்தில் நிலையத் தலைவர் த.சுபராம் தலைமையில் நடைபெற்றது.

மேற்படி இரத்ததான முகாம் நிகழ்வில் யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளையும் சேர்ந்த இளைஞர்கள், 2 யுவதிகள் மற்றும் 2 இராணுவத்தினர் என 25 பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குருதிக் கொடை வழங்கினர்.

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை இரத்தவங்கிப் பிரிவின் வைத்தியர் ரி.ஜெயதர்சன், இரத்த வங்கிப் பிரிவின் பொறுப்புத் தாதிய உத்தியோகத்தர் கே.சிவநேசன் உள்ளிட்ட வைத்தியசாலையின் இரத்தவங்கிப் பிரிவினர் நேரடியாக கலந்து கொண்டு குருதி சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இதேவேளை, ஒரு வருடத்தில் மூன்று தடவைகள் என்ற அடிப்படையில் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்து நடாத்தி வருகின்றோம். அந்தவகையில் தற்போது இரத்தவங்கிகளில் குருதி வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது என அறியக் கிடைத்ததன் அடிப்படையில் இன்றைய தினம் எமது 18 ஆவது இரத்ததான முகாம் நிகழ்வை ஒழுங்கு செய்து நடாத்தியுள்ளோம் என இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் அமைப்பாளர் நாகேந்திரன் சுகந்தன் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் எமது செய்தித் சேவைக்கு விசேடமாகத் தெரிவித்த கருத்துக்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள காணொளியில் நீங்கள் காணலாம்.

(செய்தித் தொகுப்பு மற்றும் காணொளி:- செ.ரவிசாந்)