கொக்குவிலில் நாளை புரட்சிகர முன்னோடி சுப்பிரமணியத்தின் 32 ஆவது ஆண்டு நினைவுக் கூட்டம்

பொதுவுடமை இயக்கத்தின் புரட்சிகர முன்னோடியும், புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் ஆரம்பகாலப் பொதுச் செயலாளரும், வெகுஜனப் போராட்ட வழிகாட்டியுமான கே.ஏ.சுப்பிரமணியத்தின் 32 ஆவது ஆண்டு நினைவுக் கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை(05.12.2021) பிற்பகல்-03.30 மணியளவில் இல. 62, கே.கே.எஸ். வீதி, கொக்குவில் சந்தியில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் வன்னி மாவட்டங்களுக்கான செயலாளர் என்.பிரதீபன் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ள இக் கூட்டத்தில் நினைவுரையினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அகிலன் கதிர்காமர் ‘இலங்கையின் இன்றைய உச்சக்கட்ட நெருக்கடிகள் அரசியல் பொருளாதாரத்தில் திருப்புமுனையை ஏற்படுத்துமா?’ எனும் தலைப்பில் ஆற்றவுள்ளார். அவ் உரையினைத் தொடர்ந்து திறந்த கலந்துரையாடலும் இடம்பெறும்.

இதேவேளை, சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக இடம்பெறவுள்ள மேற்படி நிகழ்வில் ஆர்வலர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு கே.ஏ.சுப்பிரமணியம் நினைவுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

(செ.ரவிசாந்)