குப்பிழான் நாகபூஷணி அம்பாளுக்கு மகா கும்பாபிஷேகம்(Photos)

குப்பிழான் வீரமனை நாகபூஷணி அம்பாள் ஆலய மகா கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை(23.01.2022) முற்பகல்-11 மணிக்குச் சிறப்பாக இடம்பெற்றது.

இவ்வாலயம் முன்னர் மிகவும் சிறியதொரு அமைப்பைக் கொண்டிருந்த நிலையில் தற்போது அப்பகுதி மக்களின் ஒத்துழைப்புடன் புதிய கட்டடம் அமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

குப்பிழான் கன்னிமார் கெளரி அம்பாள் ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ சி.கிருஷ்ணசாமிக் குருக்கள் தலைமையில் கும்பாபிஷேகக் கிரியை வழிபாடுகள் நிகழ்த்தப்பட்டது. மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அடியவர்களுக்கு அன்னதானமும் பரிமாறப்பட்டது.

(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)