இணுவில் இந்துக் கல்லூரியின் தேசிய வாசிப்பு மாத நூலக தினமும் இந்துநாதம் சஞ்சிகை வெளியீடும்

இணுவில் இந்துக் கல்லூரியின் தேசிய வாசிப்பு மாத நூலக தினமும் இந்துநாதம் சஞ்சிகை வெளியீடும் நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை (28.01.2022) முற்பகல்-11 மணிக்கு மேற்படி கல்லூரியின் பிரதான மண்டபத்தில் கல்லூரியின் அதிபர் வே.உதயமோகன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

மேற்படி நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மதுவரி அத்தியட்சகர் நா.கிருபாகரன் பிரதம விருந்தினராகவும், ஓய்வுநிலை ஆசிரியை செல்வி செ.கலாவல்லி சிறப்பு விருந்தினராகவும், இணுவில் இந்து அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தைச் சேர்ந்த பண்டிதை திருமதி.வைகுந்தம் கணேசபிள்ளை கெளரவ விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

குறித்த நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு இணுவில் இந்துக் கல்லூரியின் நூலக அபிவிருத்திக் குழு கேட்டுள்ளது.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)