குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தின் ஒன்பதாவது ஆண்டு நிறைவுநாள் நிகழ்வு நாளை

 

குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தின் ஒன்பதாவது ஆண்டு நிறைவு நாள் நிகழ்வு நாளை சனிக்கிழமை (29.01.2022) காலை-09 மணியளவில் ஆச்சிரம முன்றலில் சிறப்புப் பொங்கல் வழிபாடுகளுடன் ஆரம்பமாகிச் சிறப்புற நடைபெறவுள்ளது.

தொடர்ந்து ஆச்சிரமத்தில் விசேட பூசை வழிபாடுகளும், கூட்டுப் பிரார்த்தனை நிகழ்வும், இறுதியாக அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கலும் இடம்பெறும்.

எனவே, மேற்படி நிகழ்வில் அனைவரையும் கொரோனா சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றிக் கலந்து கொள்ளுமாறு ஆச்சிரமப் பொறுப்பாளர் கேட்டுள்ளார்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)