யாழில் நாளை மின்தடைப்படும் பகுதிகள்….

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நாளை சனிக்கிழமை(29.01.2022) காலை-08 மணி முதல் மாலை-05 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சாரசபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, யாழ்.தொண்டைமானாறு, உடுப்பிட்டி நூலகம், வல்லை, கெருடாவில், மயிலியதனை, பொக்கணை, சிதம்பராக் கல்லூரி, கல்வயல், மானாவளை, சந்திரபுரம், மட்டுவில், மட்டுவில் புத்தூர் வீதி, இராணுவ முகாம், நாரந்தனை தெற்கு, நாரந்தனை நீர்வழங்கல் திட்டம், புளியங்கூடல், சுருவில்- ஊர்காவற்துறை, சரவணைச் சந்தி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)