இணுவில் பொதுநூலகத்தில் சதுரங்கச் சுற்றுப் போட்டி: ஆர்வத்துடன் மாணவர்கள் பங்கேற்பு(Video,Photos)

இணுவில் பொது நூலக ஆண்டு விழாவை முன்னிட்டு இணுவில் பொதுநூலக நிர்வாகத்தின் ஏற்பாட்டில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை(12.4.2022) மேற்படி நூலக கலாசார மண்டபத்தில் மூளையை விருத்தியாக்கும் சதுரங்கச் சுற்றுப் போட்டி நடைபெற்றது.

நேற்றுக் காலை-08.45 மணிக்கு ஆரம்பமான மேற்படி போட்டிகளில் 235 மாணவ, மாணவிகள் மிகவும் ஆர்வத்துடன் பங்குபற்றினர்.

பாடசாலை மாணவர்களுக்குப் பல்வேறு பிரிவுகளின் கீழ் இடம்பெற்ற இந்தப் போட்டிகள் ஒவ்வொரு பிரிவுக்கும் ஐந்து சுற்றுக்களைக் கொண்டதாக இடம்பெற்றன. குறித்த போட்டிகளில் இணுவில் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமன்றி அயற் கிராமத்தவர்கள் மற்றும் யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளையும் சேர்ந்த மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, மாணவர்களை அவர்களின் பெற்றோர்கள் சதுரங்கச் சுற்றுப் போட்டிக்கு அழைத்து வந்த நிலையில் இணுவில் பொதுநூலக வளாகத்தில் பெருந் திரளானோரை அவதானிக்க முடிந்தது.


(செய்தித் தொகுப்பு, காணொளி மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)