ஆரம்பமாகிறது குப்பிழான் சிவகாமி அம்பாள் அலங்கார உற்சவம்

சித்தர்கள் வரிசையில் இடம்பிடித்த சரவணச் சாமியாரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்பட்டு வந்த குப்பிழான் வடக்கு சிவகாமி அம்பாள் ஆலயம்(சமாதி கோயில்) வருடாந்த அலங்கார உற்சவம் எதிர்வரும்-07 ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்தும் பத்துத் தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய அலங்கார உற்சவ நாட்களில் தினமும் முற்பகல்-10 மணிக்கு அன்னைக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்று அதனைத் தொடர்ந்து மதியம் அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும்.

அலங்கார உற்சவத்தின் பத்தாம் நாளான எதிர்வரும்-16 ஆம் திகதி திங்கட்கிழமை அம்பாளுக்கு விசேடமாக 108 சங்காபிஷேகம் நடைபெறும். மறுநாள் 17 ஆம் திகதி வைரவர் பொங்கல் உற்சவம் இடம்பெறும் எனவும் மேற்படி ஆலய தர்மகர்த்தா திருமதி.செ.காந்திமதி தெரிவித்துள்ளார்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)