சுதுமலையில் நாளை செந்தமிழாகம கடவுள் மங்கல நன்னீராட்டு விழா(Photos)

சுதுமலை திருலிங்கேச்சரம் கயிலைநாதர் ஆலயத்தில் நந்தியெம்பெருமானுக்கு செந்தமிழாகம கடவுள் மங்கல நன்னீராட்டு விழா நாளை ஞாயிற்றுக்கிழமை(08.5.2022) காலை-08.55 மணி முதல் முற்பகல்-10.25 மணி வரையுள்ள சுபவேளையில் நடைபெறும்.

கடவுள் மங்கல நன்னீராட்டு விழாவை முன்னிட்டான எண்ணெய்க் காப்புச் சாத்தும் வைபவம் இன்று சனிக்கிழமை(07.5.2022) காலை-09 மணி முதல் மாலை-06 மணி வரை இடம்பெற்றிருந்தது.

இதேவேளை, நேற்று வெள்ளிக்கிழமை மாலை செந்தமிழாகம
கடவுள் மங்கல நன்னீராட்டு விழாவின் ஆரம்பக் கிரியை வழிபாடுகள் இடம்பெற்றிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)