மயிலணிச் சிவனுக்கு நாளை தேர்த் திருவிழா

‘மயிலணிச் சிவன்’ என அழைக்கப்படும் சுன்னாகம் மயிலணி திருக்குடவாயில் விசாலாட்சி அம்பாள் சமேத ஸ்ரீவிஸ்வநாத சுவாமி கோயில் வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை(15.5.2022) காலை-09 மணிக்குத் தேர்த் திருவிழா இடம்பெறும்.

இதேவேளை, இவ்வாலய வருடாந்த மஹோற்சவத்தின் சப்பரத் திருவிழா இன்று சனிக்கிழமை இடம்பெற்றதுடன் நாளை மறுதினம் திங்கட்கிழமை காலை-09 மணிக்குத் தீர்த்தோற்சவமும், அன்றையதினம் மாலை-06.30 மணிக்கு கொடியிறக்க உற்சவமும் நடைபெறும்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)