யாழில் எரிபொருளுக்காக இரவு, பகலாக  நீண்ட வரிசைகள்: மக்கள் கொதிப்பு(Videos, Photos)

யாழ்.குடாநாட்டில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக கடந்த சில தினங்களாக மக்கள் இரவு, பகலாக மிக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இன்று திங்கட்கிழமையும்(23.5.2022) அதிகாலை, காலை வேளையில் மாத்திரமன்றி மதிய வேளையிலும் கொளுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் யாழில் பல பகுதி எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மோட்டார்ச் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

இதேவேளை, யாழ்.வலிகாமத்தில் உடுவில், சுன்னாகம் பகுதி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளைப் பெறுவதற்காகப் பல நூற்றுக்கணக்காண மக்கள் வரிசை வரிசையாக  குவிந்திருந்தனர். இதன்போது அங்கு காத்திருந்த மக்களிடம் வினாவிய போது, தற்போதைய நெருக்கடி நிலைக்கு அரசாங்கத்தின் மோசமான செயற்பாடுகளே காரணம் எனக் குற்றம் சாட்டினர். அத்துடன் இதுதொடர்பில் கொதிப்படைந்த நிலையில் கருத்துக்களையும் வெளியிட்டனர்.

(செய்தித் தொகுப்பு மற்றும் காணொளிகள்:- செ.ரவிசாந்)