எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிப்பு: பொதுமக்கள் கடும் பாதிப்பு!

இன்று செவ்வாய்க்கிழமை(24.5.2022) அதிகாலை-3 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CEYPETCO) அறிவித்துள்ளது.

இதற்கு அமைய ஒக்டென் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விற்பனை விலை 420 ரூபாவாகவும், ஒக்டென் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விற்பனை விலை 450 ரூபாவாகவும், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விற்பனை விலை 400 ரூபாவாகவும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விற்பனை விலை 445 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, லங்கா ஐஓசி (LIOC) நிறுவனமும் இன்று முதல் அதே அதிகரிப்பின் அடிப்படையில் பெற்றோல்,டீசலின் விலைகளை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. எனினும், மண்ணெண்ணெய் விலை அதிகரிக்கப்படவில்லை

எரிபொருட்களின் தொடர்ச்சியான விலை அதிகரிப்பினால் பொதுமக்கள் கடும் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.