சுன்னாகம் தெற்கு சிவபூதராயர் அடியார்கள் நம்பிக்கை நிதியம் அங்குரார்ப்பண வைபவம் நாளை

சுன்னாகம் தெற்கு சிவபூதராயர் அடியார்கள் நம்பிக்கை நிதியம் அங்குரார்ப்பண வைபவம் நாளை வெள்ளிக்கிழமை(10.6.2022) மாலை-4 மணிக்குச் சுன்னாகம் தெற்கு ஸ்ரீ சிவபூதராயர் ஆலயத்தில் நம்பிக்கை நிதியத் தலைவர் சு.ஸ்ரீகுமரன் தலைமையில் நடைபெறும்.

மேற்படி நிகழ்வில் நம்பிக்கை நிதிய உபதலைவர் பொ.கமலநாதன், சுன்னாகம் தெற்கு ஸ்ரீ சிவபூதராயர் ஆலயத் தர்மகர்த்தா சபைத் தலைவர் இ.தம்பிரத்தினம் ஆகியோர் வாழ்த்துரைகள் ஆற்றவுள்ளனர். கனடா நிதி அமைச்சில் சிரேஷ்ட வெளிக்களக் கணக்காய்வாளராக கடமையாற்றும் கந்தையா மகேந்திரலிங்கம் குறித்த நிகழ்வில் சிறப்புரை நிகழ்த்தவுள்ளார்.

இதேவேளை, மேற்படி நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)