ஊர்காவற்துறை லயன்ஸ் விளையாட்டுக் கழகத்தினருக்கு விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு(Photos)

பூமணி அம்மா அறக்கட்டளையின் உதவிப் பணியாக ஊர்காவற்துறை லயன்ஸ் விளையாட்டுக் கழகத்தினருக்கு விளையாட்டு உபகரணங்கள் இன்றையதினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபகத் தலைவரும், பிரான்ஸ் சர்வதேச தமிழ் வானொலி வானொலி, கனடா யுகம் வானொலி ஆகியவற்றின் பணிப்பாளருமான யாழ்.தீவகம் வேலணை மேற்கு சரவணையைச் சேர்ந்த விசுவாசம் செல்வராசாவின் நெறிப்படுத்தலில் இருபத்து ஐந்தாயிரம் பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் யாழ்.கொட்டடியில் அமைந்துள்ள பூமணி அம்மா அறக்கட்டளையின் யாழ்.தலைமைச் செயலகத்தில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை(24.6.2022) முற்பகல்-11 மணியளவில் மேற்படி லயன்ஸ் கழக நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டது.

இதேவேளை, பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கை நிர்வாகிகளான தலைவர் நா.தனேந்திரன், செயலாளர் விந்தன் கனகரட்ணம், இணைப்பாளர் இ.மயில்வாகனம் ஆகியோர் கலந்து கொண்டு குறித்த விளையாட்டு உபகரணங்களை நேரடியாக கையளித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செ.ரவிசாந்)