காங்கேசன்துறையிலிருந்து பாண்டிச்சேரிக்கு சரக்கு கப்பல் சேவையை ஆரம்பிக்க அனுமதி!

இந்தியாவின் பாண்டிச்சேரி-யாழ்.காங்கேசன்துறைக்கு இடையில் சரக்கு கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்குப் பாதுகாப்பு அமைச்சு அனுமதியளித்துள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதற்கு அமைய எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் சரக்கு கப்பல் காங்கேசன்துறையை வந்தடையவுள்ளது.

மேற்படி திட்டத்தின் கீழ் எரிபொருள், உரம், பால் மா மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.