யாழில் சிறப்பாக இடம்பெற்ற இந்தியாவின் 75 ஆவது சுதந்திரதின நிகழ்வுகள்(Photos)


இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் நேற்றுத் திங்கட்கிழமை(15.8.2022)காலை-9 மணி முதல் யாழ்ப்பாணம் மருதடியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

இந்தியாவின் தேசியக் கொடியை யாழ்.இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் ஏற்றி வைத்தார்.

இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியை யாழ்.இந்தியத் துணைத் தூதுவர் வாசித்தார். அதனைத் தொடர்ந்து கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)