ஏழாலை புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தில் நாளை கிருஷ்ண ஜெயந்தி உற்சவம்

‘ஏழாலை’ எனும் பெயர் உருவாகக் காரணமான ஏழு ஆலயங்களில் ஒன்றான யாழ்.ஏழாலை புவனேஸ்வரி அம்பாள் ஆலய ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் நாளை சனிக்கிழமை(20.8.2022) சிறப்பாக நடைபெற உள்ளது.

நாளை மாலை-4.30 மணியளவில் ஸ்ரீதேவி பூமாதேவி சமேத வெங்கடேசப் பெருமானுக்கு விசேட அபிஷேகம் பூசைகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து கிருஷ்ண பிரான் வீதி உலா வரும் திருக் காட்சியும், மாலை-6 மணியளவில் உறியடி உற்சவமும் இடம்பெறும்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)