யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 41 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று புதன்கிழமை (07.10.2026 ) மேற்படி பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் பல்கலைக்கழக வேந்தர் தகைசால் பேராசிரியர் இ.குமாரவடிவேல் தலைமையில் மூன்று அமர்வுகளாக சிறப்புற இடம்பெற்றன.
இந்த அமர்வுகளில் பல்கலைக்கழக வேந்தர் தகைசால் பேராசிரியர். இ.குமாரவடிவேல், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி ஆகியோர் பட்டதாரிகளுக்கும், டிப்ளோமாதாரிகளுக்கும் பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும், பரிசில்கள், புலமைப் பரிசில்களையும் வழங்கியதுடன் சாதனை மாணவர்களுக்குத் தங்கப் பதக்கங்களையும் அணிவித்துக் கெளரவித்தனர்.

.png)



