வரலாற்றுச் சிறப்பு மிக்க கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரர் ஆலயத்தில் இன்று வியாழக்கிழமை (08.10.2026 ) மாலை-04 மணியளவில் பிரதோச விரத உற்சவம் பக்திபூர்வமாக இடம்பெறவுள்ளது.
இன்று மாலை-04 மணியளவில் அபிஷேகம் ஆரம்பமாகும். அதனைத் தொடர்ந்து விசேட பூசை வழிபாடுகள், வசந்த மண்டபப் பூசை வழிபாடுகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து நகுலேஸ்வரப் பெருமான் தேவி சமேதரராக உள்வீதி எழுந்தருளி அடியவர்களுக்கு அருள்பாலிப்பார்.


