ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே ஆக்கிரமிக்கப்பட்ட ஒலேஷ்கி நகரில் உணவு நெருக்கடியைச் சமாளிக்கவும், பொதுமக்களை வெளியேற்றவும் தற்காலிக உள்ளூர்ப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு உக்ரைனில் போரினால் பிரிக்கப்பட்ட கெர்சன் பிராந்தியத்தில் உள்ள, ரஷ்ய ஆக்கிரமிப்பில் இருக்கும் ஒலேஷ்கி நகரில் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக, உக்ரைனிய, ரஷ்ய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் நேற்று ஒரு ஒப்பந்தத்தை எட்டினர். அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப் மற்றும் அமெரிக்காவின் முயற்சியால் இந்த ஒப்பந்தம் மத்தியஸ்தம் செய்யப்பட்டது.
இதேவேளை, ரஷ்யாவுடனான உள்ளூர்ப் போர் நிறுத்தம் அக்டோபர்-27 அன்று தொடங்கிப் பல நாட்கள் நீடிக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


