யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்தவங்கிப் பிரிவின் வேண்டுகோளை ஏற்று யாழ்.மானிப்பாய் இந்துக் கல்லூரிப் பாடசாலைச் சமூகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வருடாந்த இரத்ததான முகாம் நிகழ்வு இன்று புதன்கிழமை (04.11.2026) காலை தொடக்கம் மாலை-03 மணி வரை கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
குறித்த நிகழ்வில் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்களால் இயன்ற குருதியைத் தானமாக வழங்கி உயிர் காக்கும் பணிக்கு ஆதரவு வழங்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.


