Home ஆன்மீகம்

ஆன்மீகம்

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் யாழ்ப்பாணப் பிரதேச செயலக கலாசாரப் பிரிவினரின் ஒழுங்கமைப்பில் கொழும்புத்துறை சந்திரசேகரப் பிள்ளையார் ஆலயத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை(16.5.2022) வைகாசி விசாகப் பொங்கலும், சிறுவர்களின் பஜனை நிகழ்வும் சிறப்புற நடைபெற்றது. குறித்த நிகழ்வில் யாழ்.மாவட்டக் கலாசார உத்தியோகத்தர் இ.கிருஷ்ணகுமார், சக்கரம் சமுக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் இ.த.கமலநாதன், பிரதேச செயலக கலாசார...
'மயிலணிச் சிவன்' என அழைக்கப்படும் சுன்னாகம் மயிலணி திருக்குடவாயில் விசாலாட்சி அம்பாள் சமேத ஸ்ரீவிஸ்வநாத சுவாமி கோயில் வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை(15.5.2022) காலை-09 மணிக்குத் தேர்த் திருவிழா இடம்பெறும். இதேவேளை, இவ்வாலய வருடாந்த மஹோற்சவத்தின் சப்பரத் திருவிழா இன்று சனிக்கிழமை இடம்பெற்றதுடன் நாளை மறுதினம் திங்கட்கிழமை காலை-09 மணிக்குத் தீர்த்தோற்சவமும், அன்றையதினம்...
சுதுமலை திருலிங்கேச்சரம் கயிலைநாதர் ஆலயத்தில் நந்தியெம்பெருமானுக்கு செந்தமிழாகம கடவுள் மங்கல நன்னீராட்டு விழா நாளை ஞாயிற்றுக்கிழமை(08.5.2022) காலை-08.55 மணி முதல் முற்பகல்-10.25 மணி வரையுள்ள சுபவேளையில் நடைபெறும். கடவுள் மங்கல நன்னீராட்டு விழாவை முன்னிட்டான எண்ணெய்க் காப்புச் சாத்தும் வைபவம் இன்று சனிக்கிழமை(07.5.2022) காலை-09 மணி முதல் மாலை-06 மணி வரை இடம்பெற்றிருந்தது. இதேவேளை, நேற்று வெள்ளிக்கிழமை...
சித்தர்கள் வரிசையில் இடம்பிடித்த சரவணச் சாமியாரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்பட்டு வந்த குப்பிழான் வடக்கு சிவகாமி அம்பாள் ஆலயம்(சமாதி கோயில்) வருடாந்த அலங்கார உற்சவம் எதிர்வரும்-07 ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்தும் பத்துத் தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய அலங்கார உற்சவ நாட்களில் தினமும் முற்பகல்-10 மணிக்கு அன்னைக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்று அதனைத் தொடர்ந்து...
மாவை சித்திவிநாயகர் அம்பாள் ஆலயத்தின் காரியாலயக் கட்டடத் திறப்பு விழா நிகழ்வு இன்று புதன்கிழமை(04.5.2022) பிற்பகல்-04.56 மணி முதல் 05.56 மணி வரையுள்ள சுப வேளையில் இடம்பெறவுள்ளது. மாவை சித்திவிநாயகர் அம்பாள் ஆலய பரிபாலன சபைத் தலைவர் இ.சாந்தகுமார் தலைமையில் இடம்பெறவுள்ள மேற்படி கட்டடத் திறப்பு விழா நிகழ்வில் வலி.வடக்குப் பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன்,...
சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகத்தால் மானிப்பாய் கட்டுடை கோபாலன் முன்பள்ளியில் கல்வி கற்கும் 30 சிறார்களுக்கு 240,000 ரூபா கற்றல் உபகரணங்களும், உலர் உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டன நேற்றுத் திங்கட்கிழமை(02.5.2022) மேற்படி முன்பள்ளியில் இடம்பெற்ற நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் நேரடியாகச் சென்று குறித்த உதவிகளைக் கையளித்தார். புத்தகப் பைகள், அப்பியாசக் கொப்பிகள், முன்பள்ளிக்கான...
யாழ்ப்பாணம் வண்-வடகிழக்கு இறைமூத்த நைனார்(கொண்டிலடி விநாயகர்) ஆலய சித்திரை மாதச் சதுர்த்தி உற்சவம் நாளை புதன்கிழமை (04.5.2022) இடம்பெறவுள்ளது. நாளை காலை-07 மணியளவில் விநாயகப் பெருமானுக்கு உருத்திராபிஷேகம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து விநாயகப் பெருமானுக்கு விசேட பூசைகள் இடம்பெறும். தொடர்ந்து மாலை-05 மணிக்கு மூலஸ்தானப் பூசைகள் இடம்பெற்றுத் தொடர்ந்து வசந்தமண்டபப் பூசைகள் நடைபெற்று விநாயகப் பெருமான்...
கொக்குவில் கிழக்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் இன்று செவ்வாய்க்கிழமை(03.5.2022) பிற்பகல்-05 மணியளவில் ஆரம்பமாகின்றது. தொடர்ந்தும் பத்துத் தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய அலங்கார உற்சவத்தில் இறுதி நாளான எதிர்வரும்-12 ஆம் திகதி வியாழக்கிழமை சுவாமி வீதி வலம் வரும் திருக் காட்சி நடைபெறும். எதிர்வரும்-13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வைரவர் சாந்தியும் இடம்பெறும்...
யாழ்.குப்பிழான் வடபத்திரகாளி அம்பாள் ஆலய(காளி கோயில்) வருடாந்த அலங்கார உற்சவம் ஜீன் மாதம்-02 ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் விசேட அபிஷேக ஆராதனைகளுடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்தும் பத்துத் தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய அலங்கார உற்சவத்தில் பத்தாம் நாளான எதிர்வரும்-11 ஆம் திகதி சனிக்கிழமை அம்பாளுக்கு சங்காபிஷேகமும், மறுநாள்-12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வைகாசி விசாகப் பொங்கலும்...
பிரசித்திபெற்ற சுன்னாகம் ஸ்ரீ கதிரமலைச் சிவன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த் திருவிழா நாளை வெள்ளிக்கிழமை (29.4.2022) காலை-09 மணிக்கு இடம்பெறவுள்ளது. சித்திரத் தேருக்கு முடி வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றதுடன் நாளைய தினம் சித்திரத் தேரில் எழுந்தருளி அருள்புரிய இருக்கின்ற சிவகாமி அம்பாள் சமேத சோமஸ்கந்த சுவாமிக்கு அபிஷேக பூசைகளும் இன்று இடம்பெற்றது. இவ்வாலய...
2,395FansLike
117FollowersFollow
585SubscribersSubscribe
- Advertisement -

தொழிநுட்பம்