யாழ்ப்பாணம் - இணுவில் கந்தசுவாமி ஆலய பிரதம குருக்களான உருத்திரமூர்த்தி குருக்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பயனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் - வடமராட்சி, வல்லை நாகதம்பிரான் ஆலய கும்பாபிஷேகப் பெருவிழா நேற்று முன்தினம் சனிக்கிழமை 24.04.2021 அன்று வெகு விமரிசையாக இடம்பெற்றது. எண்ணெய்க் காப்பைத் தொடர்ந்து இடம்பெற்ற கும்பாபிஷேக நிகழ்வுகளை பக்தர்கள் தரிசித்தனர். வல்வெட்டித்துறை - உடுப்பிட்டி வீதியில் வல்லை நாற்சந்திக்கு அருகில் இவ்வாலயம் அமைந்துள்ளது.
யாழ்.குப்பிழான் வீரமனை கன்னிமார் கெளரி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான அடியவர்கள் பங்கேற்றனர். படங்கள் - சுஜீவன்
யாழ்ப்பாணம், வடமராட்சி உடுப்பிட்டி தெற்கில் உள்ள ஸ்ரீ சாமுண்டீஸ்வரி சமேத சொர்ண ஞானவைரவர் ஆலயத்தில் இன்று காலை 28.01.2021 வியாழக்கிழமை 1008 சங்காபிஷேகம் இடம்பெற்று வருகின்றது. இந்நிகழ்வுகள் அனைத்தும் youtube ஊடாக நேரஞ்சல் செய்யப்படுகிறது.
வருடாந்தம் இடம்பெறும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் நெல் புதிரெடுத்தல் நிகழ்வு இன்று 27.01.2020 காலை இடம்பெற்றது. எமது பாரம்பரிய கலாசார விழுமியங்களை எதிர்கால சந்ததியினரும் பின்பற்ற செய்யும் வகையில் இந்நிகழ்வு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. படங்கள்: ஐங்கரன் சிவசாந்தன்-
இந்துக்களின் தீபத் திருநாள் பண்டிகை நேற்று 29.11.2020 கொண்டாடப்பட்டது. அதற்கு பல்வேறு தடைகள் வடக்கில் விதிக்கப்பட்டன. சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலயங்களில் விளக்கீடு நடத்தக்கூடாதென சுன்னாகம் பொலிஸ் நிலைய தற்காலிக பொறுப்பதிகாரி ஜெயந்தவினால் ஆலய நிர்வாகத்தினர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இணுவில் கந்தசுவாமி ஆலயத்திலும் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட தடையானது சித்தார்த்தன்...
இலங்கை வாழ் முருக பக்தர்கள் ஏராளமானோர் கந்தஷ்டி விரதத்தை அனுட்டித்து வருகின்றார்கள். இம்முறை கொரோனா காலமாகையால் ஆலய வழிபாடுகளை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் மற்றும் நல்லூர் ஆலயத்திற்குள் பக்தர்கள் உள்நுழைவதற்கு தடை மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கந்தசஷ்டி விரதத்தின் ஆரம்ப நாளான நேற்று...
இலங்கையில் தற்போது உலகளாவிய பெருந்தொ ற்றான கொரோனாவை கட்டுப்படுத்தும் முகமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகள் காரணமாக ஆலயங்களில் பக்தர்கள் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. அர்ச்சகர்கள் மாத்திரம் ஆலயங்களில் பணி செய்யலாம். இந்நிலையில் கேதாரகௌரி விரதம் தற்போது நோற்கப்பட்டு வருவதோடு, எதிர்வரும் 14.11.2020 தீபாவளி தினத்தன்று நிறைவடையவுள்ளது. இந்நிலையில் இலங்கை வாழ் மக்கள் இவ்விரதத்தை எவ்வாறு நிறைவு...
கிளிநொச்சி மாவட்டத்தின் கந்தன்குளம் செல்வாநகர் ஓம் சக்திவேலன் ஆலயத்தில் நேற்று 09.11.2020 திங்கள்கிழமை காலை 8.30 மணிக்கு சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக விசேட பூசைகள் பிரார்த்தனைகளை தொடர்ந்து மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம் வளர்க்கும் நிகழ்வு இடம்பெற்றது. இலங்கையிலும் பரவுகின்ற கொரோனா நோயின் தாக்கத்திலிருந்து மக்கள் விடுபட இந்து ஆலயங்களில் மஹாம்ருத்யுஞ்ஜய...
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தின் வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலயத்தில் இன்று காலை நவராத்திரி விழாவின் இறுதி நாளான மானம்பூ திருவிழா வெகு விமரிசையாக இடம்பெற்றது. ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து முருகப் பெருமான் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வெளிவீதி வலம் வந்ததை தொடர்ந்து வாழைவெட்டும் நிகழ்வும் இடம்பெற்றது. கொரோனா காலப்பகுதி ஆகையால்...
2,395FansLike
117FollowersFollow
585SubscribersSubscribe
- Advertisement -

தொழிநுட்பம்