பெரும்போகத்திற்குத் தேவையான சேதனப் பசளையை உற்பத்தி செய்வதை துரிதப்படுத்துவதற்கு பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
உர உற்பத்திக்குத் தேவையான இயந்திரங்கள் எவை? என்பது பற்றி ஆராய்ந்து, அவற்றை இறக்குமதி செய்வதற்கும் உள்நாட்டில் தயாரிக்க முடியுமான இயந்திரங்களை அரசுக்குச் சொந்தமான தொழிற்சாலைகளிலும் இராணுவத்தின் பொறியியல் படைப் பிரிவின் பங்களிப்புடனும் தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு...
யாழ்ப்பாணத்திலிருந்து முருங்கை இலை சார்ந்த உணவுற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொடர்பில் விளக்குகிறார் சத்தூண் பொதினர் நிறுவன இயக்குனர் சங்கரப்பிள்ளை நகுலேஸ்வரன்.
பசுமை புரட்சியின் பின்னரான விவசாயத்தில் அதிகளவு இரசாயன மற்றும் கிருமிநாசினி பாவனையால் நஞ்சாக்கப்பட்ட மரக்கறிகளைத் தான் வாங்கி உண்ணும் துயர நிலை உள்ளது. மனித வாழ்வின் அத்தியாவசியமான குடிநீர் கூட இன்று பணமாக்கப்படுகின்றது. மரபணு மாற்றப்பட்ட விதைகளால் பாரம்பரிய விதைகள் அழிவின் விளிம்புக்கு சென்றுள்ளன.
அளவுக்கதிகமான இரசாயன பாவனையால் இறுதியில் மண்...
யாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்கு பிரதேசத்தின் ஏழாலையில் வசிக்கும் தியாகராசா ஐயாத்துரை எனும் 92 வயதான விவசாயியின் அன்றைய தற்சார்பு வாழ்வின் சில பக்கங்களை ஆவணப்படுத்தும் முயற்சியே இது.
இப்போதும் சிறிய அளவில் விவசாயம் செய்து வருவதோடு பயிர்களுக்கு தண்ணீர் கட்டுதல், புல்லு பிடுங்குதல் போன்றவற்றை தானே செய்தும் வருகின்றார்.
பல ஆடுகள், மாடுகளை பராமரித்து வந்த...
இயற்கை வழி இயக்கத்தின் இயற்கை வழி அங்காடி 12.01.2021 செவ்வாய்க்கிழமை மாலை பலாலி வீதி, கோண்டாவிலில் (தாயகம் கிளினிக் அருகே) உள்ள புதிய இடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இயற்கை வழி செயற்பாட்டாளர்கள் இணைந்து மேற்படி அங்காடியை திறந்து வைத்தனர்.
இயற்கைவழி வேளாண்மைக்குத் தேவையான கரைசல்கள், இயற்கை உரங்கள், பாரம்பரிய விதைகள், கன்றுகள் முதற்கொண்டு நஞ்சற்ற வேளாண் உற்பத்திகள்...
2018 ஆம் ஆண்டு சனவரி மாதம் 8 - 14 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் தமிழகத்தில் இருந்து இயற்கைவழி வேளாண் அறிஞர்கள் வருகைதந்து வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் கருத்தரங்குகளை நடாத்தினர். புதியவெளிச்சத்தின் அனுசரணையுடன் கருத்தரங்குகள் நடாத்தப்பட்ட இக்காலப்பகுதியானது இயற்கை விவசாய வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
கடந்த மூன்று வருட காலமாக இயற்கை விவசாய வாரத்தில் இயற்கைவழி இயக்கத்தினராலும்...
வடமாகாணத்திலிருந்து பல்லாயிரம் லீற்றர் கணக்கான பாலை நாளாந்தம் ஏற்றி தென்னிலங்கைக்கு அனுப்புகிறோம். அதிலும் வன்னி பெருநிலப்பரப்பில் இருந்து தான் அதிகளவு பால் செல்கிறது. மறுபுறம் யுத்தத்தின் பின்னரான வன்னிப் பெருநிலப்பரப்பில் தான் போசாக்கு குறைபாட்டால் பாதிக்கப்பட்ட அதிகளவு குழந்தைகள் இருக்கிறார்கள்.
குறைந்த விலைக்கு பாலை விற்று விட்டு அதி கூடிய விலைக்கு பால்மா...
யாழ்ப்பாணத்தில் இளம் தொழில் முயற்சியாளராக வளர்ந்து வரும் ஸ்ராலினியின் இயற்கை பண்ணையானது வெள்ளத்தினால் கடுமையாக பாதிப்படைந்துள்ளது.
பல்வேறு சவால்களுக்கு மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக பலவித மூலிகைகள், மரக்கறிகள், தாவரங்கள் மற்றும் ஆடுகள், தாராக்கள் என ஒருங்கிணைந்த இயற்கை பண்ணையினை உருவாக்கி இருந்தார்.
கடந்த வாரம் உருவான புரேவி புயலைத் தொடர்ந்து பலத்த...
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கைவேலியில் அமைந்துள்ளது செல்வபாக்கியம் பண்ணை. முன்னாள் போராளி தம்பதிகளான நாகலிங்கம் கனகசபாபதி நேசன் மற்றும் அவரின் துணைவியார் வசந்தி ஆகியோர் அதனை நிர்வகித்து வருகின்றனர்.
காலத்தின் தேவை கருதிய நேசன் அவர்களின் புதிய முயற்சியாக பாரம்பரிய விதை வைப்பகத்தையும் தொடங்கியுள்ளார்.
இன்று மரபணு மாற்றப்பட்ட விதைகள் தான்...
காலநிலை மாற்றம் தொடர்பில் இளையோர் ஒன்றிணையும் சர்வதேச நிகழ்வு யாழ்ப்பாண நகரத்தில் இரண்டாவது வருடமாக 13.11.2020 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு இணைய வழியில் திருக்குறள் மற்றும் தமிழ் மொழி வாழ்த்துடன் ஆரம்பமாகியது.
இம்முறை Covid - 19 பரவல் காரணமாக முற்றுமுழுதாக இணையவெளியூடாகவே நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
கிளைமத்தோன் நிகழ்வு தொடர்பிலான அறிமுகவுரையினை நிகழ்வு ஒருங்கிணைப்பு...