Home செய்திகள்

செய்திகள்

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த நவராத்திரி விஜயதசமித் திருநாளையொட்டிய மானம்பூ உற்சவம் இன்று வெள்ளிக்கிழமை (15.10.2021) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. இன்று காலை-06.45 மணிக்கு வசந்த மண்டப பூசையுடன் திருவிழா ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து பழைமையான சிறிய குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி அமைதியான முறையில் மானம்பூ...
கடந்த-02.09.2021 இல் காலமான இளம் ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஸின் 45 ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வு நாளை சனிக்கிழமை (16.10.2021) முற்பகல்-11 மணியளவில் கொடிகாமம் வெள்ளாம் போக்கட்டியில் அமைந்துள்ள ஊடகவியலாளர் பிரகாஸின் இல்லத்தில் இடம்பெறும் என மேற்படி நிகழ்வின் ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது. மேற்படி நிகழ்வில் மதகுருக்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் பிரமுகர்களின் நினைவுரைகள் நடைபெறவுள்ளது. இதேவேளை,குறித்த...
தற்போது நடைமுறையில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை எதிர்வரும்- 21 ஆம் திகதி வியாழக்கிழமை வரை கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் கொரோனா ஒழிப்பு விசேட குழுவிற்கிடையில் இன்று வெள்ளிக்கிழமை (15.10.2021) நடைபெற்ற கலந்துரையாடலில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் வரும் விடுமுறையுடன் ஆரம்பமாகும் நீண்ட...
யாழ்.குப்பிழான் வீரமனை கன்னிமார் கெளரி அம்பாள் ஆலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை (15.10.2021) சற்றுமுன் வருடாந்த நவராத்திரி விழாவின் விஜயதசமிப் பெருநாளை முன்னிட்டு மானம்பூத் திருவிழா(வாழைவெட்டு) நடந்தேறியது. இன்று காலை அம்பாளுக்கு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து வசந்தமண்டப பூசைகள் நடைபெற்றது. தொடர்ந்து அம்பாள் உள்வீதி, வெளி வீதியில் உலா வரும் திருக்...
வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய வருடாந்தக் கேதார கெளரி விரத பூசை வழிபாடு இன்று வெள்ளிக்கிழமை(15.10.2021) முற்பகல்-10 மணியளவில் சங்கல்பத்துடன் ஆரம்பமாகும் என மேற்படி ஆலயத் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்தார். தொடர்ந்தும் 21 தினங்கள் இவ்வாலயத்தில் கெளரி விரத பூசை வழிபாடுகள் இடம்பெறும். இதேவேளை, பன்னெடுங் காலமாக துர்க்காதேவி ஆலயத்தில் கேதார...
விஜயதசமி நன்னாளன்று மாலை வேளையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஊர்வலமாகத் துர்க்கை அம்பாள் ஆலயத்தைச் சென்றடைவதும், அதனைத் தொடர்ந்து துர்க்காதேவி ஆலய முன்றலில் மானம்பூத் திருவிழா(வாழை வெட்டு) இடம்பெற்று மாவைக் கந்தன் அங்கு இளைப்பாறிச் செல்வதும் மிக நீண்டகாலமாகப் பாரம்பரியமாக இடம்பெற்று வருகின்றது. எனினும், தற்போது நிலவும் கொரோனாத் தொற்று நிலைமைகள் காரணமாக...
கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தொற்று நீக்கித் திரவத்தைப் பருகிய இரண்டு ஈரானிய சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாகச் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். மேற்படி தொற்று நீக்கித் திரவத்தைப்(disinfectant liquid) பருகிய ஈரானிய சிறைக் கைதிகளான மேலும் பத்துப் பேர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்.மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பிரதான வெள்ள வடிகால் ஊடாகப் யாழ்.நகரில் அமைந்துள்ள புல்லுக் குளத்திற்குச் சென்றடைகின்ற நீரின் அளவை அதிகரிக்கும் நோக்குடன் புல்லுக் குளத்திற்கு அருகிலுள்ள வடிகாலில் நீர் செல்லுகின்ற பகுதியை அகலப்படுத்தி ஆழப்படுத்துகின்ற கடினமான பணி இன்று வியாழக்கிழமை(14.10.2021) முன்னெடுக்கப்படுகிறது. யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், மாநகர சுகாதாரக் குழுத் தலைவர்...
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்கு இரண்டு வழக்குகளிலும் பிணை வழங்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுச் சுமார் ஆறு மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரிஷாட் பதியுதீனைத் தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கக் கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே உத்தரவு...
கொரோனாத் தொற்றினைக் கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறி நிகழ்வுகளை நடத்துபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண எச்சரிக்கை விடுத்துள்ளார். பிற்போடப்பட்ட நிகழ்வுகளை நடத்துவதற்கான அனுமதியைப் பெறுவதற்கு நாளாந்தம் பொதுமக்கள் பொதுச் சுகாதாரக் காரியாலங்களுக்குப் பிரவேசிப்பதாகவும், அத்தியாவசியமற்ற எந்தவொரு நிகழ்வுகளுக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவித்தார். இதேவேளை,...
2,395FansLike
117FollowersFollow
585SubscribersSubscribe
- Advertisement -

தொழிநுட்பம்