குப்பிழான் வீரமனை கன்னிமார் கெளரி அம்பாள் ஆலய வருடாந்த நவராத்திரி பூசை வழிபாட்டின் பத்தாம் நாளான மானம்பூத் திருவிழா(வாழைவெட்டு) நாளை மறுதினம் புதன்கிழமை(05.10.2022) முற்பகல்-10 மணிக்கு இடம்பெறும் என மேற்படி ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இவ்வாலய நவராத்திரி பூசை வழிபாடுகள் கடந்த-26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை ஆரம்பமாகித் தொடர்ச்சியாக இடம்பெற்று...
நவராத்திரியின் வெற்றி தருகின்ற விஜயதசமி நன்னாளான நாளை மறுதினம் புதன்கிழமை (05.10.2022) காலை-9 மணிக்கு சேர்.பொன்.இராமநாதன் வீதி, திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சத்திய சாயி சேவா நிலையத்தில் வித்தியாரம்ப நிகழ்வு(ஏடு தொடக்குதல்) நடைபெறும். இந்தப் புனிதமான தெய்வீக நாளில் நிலையத்தில் பகவானின் முன்பாகத் தமது பிள்ளைகளுக்கு ஏடு தொடக்க விரும்புபவர்கள் மேற்படி நிலையத்தில் தங்கள் பெயர்களைப்...
வீட்டுச் சமையல் எரிவாயுவின் விலை நாளை மறுதினம் புதன்கிழமை(05.10.2022) நள்ளிரவு முதல் மீண்டும் குறைக்கப்பட உள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். விலைச் சூத்திரத்திற்கு அமையத் திருத்தப்பட்ட விலை அன்றைய தினம் அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இதேவேளை, முன்னதாக, லிட்ரோ நிறுவனம் 12.5 கிலோ நிறைகொண்ட உள்நாட்டு...
யாழ்.மாவட்ட டெங்கு கட்டுப்பாட்டுக் குழுக் கூட்டம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (30.09.2022) முற்பகல்-11 மணிக்கு யாழ்.மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இடம்பெற்றது. மேற்படி கலந்துரையாடலில் யாழ்.மாவட்டத்தில் டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றமையினால் அதனைத் தடுப்பதற்கான முற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல், மாவட்ட, பிரதேச, கிராம மட்டங்களில் குழுக்களை...
உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்குத் தொடர்பான பிரதேச ஒருங்கிணைந்த பொறிமுறை சம்பந்தமான கலந்துரையாடல் கடந்த புதன்கிழமை(28.9.2022) உடுவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் த.முகுந்தன் தலைமையில் நடைபெற்றது. மேற்படி கலந்துரையாடலில் பிரதேச செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், வலி.தெற்குப் பிரதேச சபை உறுப்பினர்கள், கிராம சேவகர்கள், சமூக மட்டப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து...
அடுத்த மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு அரைமாத சம்பளமே வழங்கப்படும் எனச் சமூக ஊடகங்களில் வெளியான செய்தியை நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மறுத்துள்ளார். மேற்படி செய்தி முற்றிலும் தவறானது எனவும் அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.
இன்று சனிக்கிழமை(01.10.2022) நள்ளிரவு முதல் பெற்றோலின் விலை குறைவடைய உள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றர் 40 ரூபாவினாலும்,ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றர் 30 ரூபாவாலும் குறைக்கப்பட உள்ளதாக இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக ஒரு லீற்றர் பெற்றோல் விலை 410 ரூபாவாகவும்,...
யாழ்.புன்னாலைக்கட்டுவன் தெற்கு கணேசா முன்பள்ளியின் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு நாளை சனிக்கிழமை(01.10.2022) முற்பகல்-9 மணிக்கு மேற்படி முன்பள்ளி முன்றலில் புன்னாலைக்கட்டுவன் தெற்கு கணேசா சனசமூக நிலையத் தலைவர் சி.செல்வஸ்கந்தராஜா தலைமையில் நடைபெற உள்ளது. நிகழ்வில் புன்னாலைக்கட்டுவன் மகாவித்தியாலய அதிபர் க.முரளிதரன் பிரதம விருந்தினராக கலந்து கொள்வார். இதன்போது முன்பள்ளிச் சிறார்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெறும்....
கொற்றாவத்தை கலை,இலக்கிய செயற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் கொற்றை பி.கிருஷ்ணான ந்தனின் 'சத்தியமும் சாத்தியமும்' கலை இலக்கியக் கட்டுரைத் தொகுப்பு வெளியீட்டு விழா நாளை சனிக்கிழமை(01.10.2022) மாலை-4.03 மணிக்குப் யாழ்.பருத்தித்துறை கொற்றாவத்தைப் பூமகள் சனசமூக நிலையப் பொதுநோக்கு மண்டப தெணியான் அரங்கில் நடைபெறும். ஜீவநதி சஞ்சிகையின் ஆசிரியர் க.பரணீதரன் தலைமையில் இடம்பெற உள்ள நிகழ்வில் நூலின்...
குப்பிழான் தெற்கு வீரமனை கன்னிமார் கெளரி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவம்-2023 அடுத்த வருடம் சித்திரை மாதம்-26 ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது. தொடர்ந்தும் பத்துத் தினங்கள் இடம்பெற உள்ள இவ்வாலய மஹோற்சவத்தில் வைகாசி மாதம்-4 ஆம் திகதி வியாழக்கிழமை தேர்த் திருவிழாவும், மறுநாள்-5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தீர்த்தத் திருவிழாவும்,...
2,395FansLike
117FollowersFollow
585SubscribersSubscribe
- Advertisement -

தொழிநுட்பம்