Home நிகழ்வுகள்

நிகழ்வுகள்

யாழ்.மாவட்ட டெங்கு கட்டுப்பாட்டுக் குழுக் கூட்டம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (30.09.2022) முற்பகல்-11 மணிக்கு யாழ்.மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இடம்பெற்றது. மேற்படி கலந்துரையாடலில் யாழ்.மாவட்டத்தில் டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றமையினால் அதனைத் தடுப்பதற்கான முற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல், மாவட்ட, பிரதேச, கிராம மட்டங்களில் குழுக்களை...
உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்குத் தொடர்பான பிரதேச ஒருங்கிணைந்த பொறிமுறை சம்பந்தமான கலந்துரையாடல் கடந்த புதன்கிழமை(28.9.2022) உடுவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் த.முகுந்தன் தலைமையில் நடைபெற்றது. மேற்படி கலந்துரையாடலில் பிரதேச செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், வலி.தெற்குப் பிரதேச சபை உறுப்பினர்கள், கிராம சேவகர்கள், சமூக மட்டப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து...
யாழ்.புன்னாலைக்கட்டுவன் தெற்கு கணேசா முன்பள்ளியின் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு நாளை சனிக்கிழமை(01.10.2022) முற்பகல்-9 மணிக்கு மேற்படி முன்பள்ளி முன்றலில் புன்னாலைக்கட்டுவன் தெற்கு கணேசா சனசமூக நிலையத் தலைவர் சி.செல்வஸ்கந்தராஜா தலைமையில் நடைபெற உள்ளது. நிகழ்வில் புன்னாலைக்கட்டுவன் மகாவித்தியாலய அதிபர் க.முரளிதரன் பிரதம விருந்தினராக கலந்து கொள்வார். இதன்போது முன்பள்ளிச் சிறார்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெறும்....
கொற்றாவத்தை கலை,இலக்கிய செயற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் கொற்றை பி.கிருஷ்ணான ந்தனின் 'சத்தியமும் சாத்தியமும்' கலை இலக்கியக் கட்டுரைத் தொகுப்பு வெளியீட்டு விழா நாளை சனிக்கிழமை(01.10.2022) மாலை-4.03 மணிக்குப் யாழ்.பருத்தித்துறை கொற்றாவத்தைப் பூமகள் சனசமூக நிலையப் பொதுநோக்கு மண்டப தெணியான் அரங்கில் நடைபெறும். ஜீவநதி சஞ்சிகையின் ஆசிரியர் க.பரணீதரன் தலைமையில் இடம்பெற உள்ள நிகழ்வில் நூலின்...
சர்வதேச தகவலறியும் தினத்திற்கு இணைவாகத் தகவலறியும் சட்டத்தைப் பயன்படுத்தும் போது வடமாகாண ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பிலான கலந்துரையாடல் நாளை வியாழக்கிழமை(29.9.2022) காலை-9 மணி தொடக்கம் பிற்பகல்-12.30 மணி வரை யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெறும். குறித்த கலந்துரையாடலில் தகவல் ஆணைக்குழுவின் அனைத்து ஆணையாளர்களும் கலந்து கொள்ள உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (செய்தித் தொகுப்பு:-செ.ரவிசாந்)
தியாகதீபம் திலீபன் நினைவாக தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரின் ஏற்பாட்டில் நாளை ஞாயிற்றுக்கிழமை(25.9.2022) காலை-9.30 மணியளவில் யாழ்.நல்லூரில் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு அருகில் "தியாகதீபத்திற்காக ஒரு துளி குருதி!" எனும் தொனிப் பொருளில் இரத்ததான முகாம் இடம்பெறும். குறித்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். (செய்தித் தொகுப்பு:-...
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் குருதிக் கொடை முகாம் நிகழ்வு நாளை சனிக்கிழமை(24.9.2022) காலை-9 மணி முதல் மேற்படி கல்லூரியின் குமாரசுவாமி மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்தக் குருதிக் கொடை முகாம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். (செய்தித் தொகுப்பு:-செ.ரவிசாந்)
இத்தாலி மனிதநேயச் சங்கத்தின் நிறுவுனர் ம.கிருபாகரனின் புதல்வி செல்வி.கிருபாகரன் யதுசிகா தனது பிறந்த தினத்தை முன்னிட்டு முப்பதாயிரம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்களை நயினாதீவு கணேச மகாவித்தியாலயத்தின் பழைய மாணவனும், சமூக சேவகருமான மங்களேஸ்வரன் கார்த்தீபன் ஊடாக மேற்படி பாடசாலைக்கு வழங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்வு அண்மையில் குறித்த பாடசாலையில் இடம்பெற்றிருந்தது. (செய்தித் தொகுப்பு:-செ.ரவிசாந்)
தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் 'நூறு மலர்கள் மலரட்டும்' எனும் தொனிப்பொருளில் யாழ்.வட்டு இந்துக் கல்லூரியில் 23,24,25 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் புத்தக அரங்க விழாவின் இரண்டாவது நாளான நாளை சனிக்கிழமை(24.9.2022) பிற்பகல்-2.30 மணியளவில் பிரபல நாடக ஆசிரியரும், ஈழத் தமிழ் நாடகத்துறையின் மிகவும் முக்கியத்துவம் பெறும் நெறியாளருமான பு.கணேசராசா...
சேர்.பொன்.இராமநாதன் வீதி, திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பகவான் ஸ்ரீசத்திய சாயி சேவா நிலையத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நிகழ்வு எதிர்வரும்-25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை-8.30 மணி முதல் பிற்பகல்-12.30 மணி வரை மேற்படி நிலைய மண்டபத்தில் இடம்பெற உள்ளது. தாங்கள் வழங்கும் இரத்ததானம் பல நோயாளர்களின் உயிர்களைக் காக்க வல்லது. நோயாளர்களின்...
2,395FansLike
117FollowersFollow
585SubscribersSubscribe
- Advertisement -

தொழிநுட்பம்