Home நிகழ்வுகள் அறிவித்தல்

அறிவித்தல்

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளிலேயே நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் விளையாட்டுத் திடல் நாளை (12) வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு திறந்து வைக்கப்பட உள்ளது. யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் பிரித்தானியக் கிளையின் பழைய மாணவர்களால் "Thidal Project" ஊடாக புனரமைக்கப்பட்ட விளையாட்டுத்திடல் தொடர்பில் தெளிவுபடுத்தும் விசேட ஊடக சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒக்சிசன் தட்டுப்பாடு காணப்படுவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்தார். யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் யாழ் போதனா வைத்தியசாலையில் நாளொன்றுக்கு 120வரையான ஒக்சிசன் சிலிண்டர்கள் இதுவரை பாவிக்கப்பட்டு வந்ததாகவும் எனினும் தற்போது கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக குறித்த சிலிண்டர் பாவனை...
யாழ்ப்பாணத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமையும் நான்காவது நாளாக கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 30 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இதனை தவற விட வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
மறைந்த ஈழத்து எழுத்தாளர் டொமினிக் ஜீவா தொகுப்பு நூல் வெளியீடும் நினைவுப் பகிர்வும் நாளை ஞாயிறு மாலை 7 மணிக்கு Zoom கலந்துரையாடலாக இடம்பெறவுள்ளது. இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி (பிரான்ஸ்) ஒழுங்கு செய்யும் இந்த நிகழ்வுக்கு தேவதாசன் தலைமை தாங்குகிறார். நினைவு உரைகளை டொமினிக் ஜீவாவின் மகன் திலீபன் டொமினிக், மூத்த எழுத்தாளர்...
இன்று பொலிகண்டியில் நிறைவடையும் வரையிலான பேரணி வழித்தடம் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டம் பொத்துவிலில் தொடங்கிய பேரணி தற்போது கிளிநொச்சியில் நிலைகொண்டுள்ள நிலையில் நாளை காலை முதல் பேரணி நிறைவுறும் வரையிலான பயண வழித்தடம் குறித்த விபரம் வெளியாகியுள்ளது. அதன் விபரம் வருமாறு, கிளிநொச்சி டிப்போ சந்தியில் காலை 8 மணிக்கு தொடக்கம் பரந்தன் இயக்கச்சி கொடிகாமம் பளை சாவகச்சேரி கைதடி நாவற்குழி அரியாலை யாழ் நகரம் யாழ் பொதுநூலகம் யாழ்/உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு...
2018 ஆம் ஆண்டு சனவரி மாதம் 8 - 14 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் தமிழகத்தில் இருந்து இயற்கைவழி வேளாண் அறிஞர்கள் வருகைதந்து வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் கருத்தரங்குகளை நடாத்தினர். புதியவெளிச்சத்தின் அனுசரணையுடன் கருத்தரங்குகள் நடாத்தப்பட்ட இக்காலப்பகுதியானது இயற்கை விவசாய வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. கடந்த மூன்று வருட காலமாக இயற்கை விவசாய வாரத்தில் இயற்கைவழி இயக்கத்தினராலும்...
இந்துக்களின் தீபத் திருநாள் பண்டிகை நேற்று 29.11.2020 கொண்டாடப்பட்டது. அதற்கு பல்வேறு தடைகள் வடக்கில் விதிக்கப்பட்டன. சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலயங்களில் விளக்கீடு நடத்தக்கூடாதென சுன்னாகம் பொலிஸ் நிலைய தற்காலிக பொறுப்பதிகாரி ஜெயந்தவினால் ஆலய நிர்வாகத்தினர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இணுவில் கந்தசுவாமி ஆலயத்திலும் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட தடையானது சித்தார்த்தன்...
வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நாளை 30 ஆம் திகதி முதல் டிசம்பர் 7ஆம் திகதி வரை 'எங்கட புத்தகங்கள்' கண்காட்சியும் விற்பனையும் சுன்னாகம் பொதுநூலகத்தில் இடம்பெற உள்ளது. நூலகங்களினால் வாசிப்பு மாதமாகிய ஒக்டோபர் மாதத்தில் வருடம் தோறும் முன்னெடுக்கப்படும் நிகழ்வுகளின் வரிசையில் இவ்வருடம் 'எங்கட புத்தகங்கள்' கண்காட்சி மற்றும் விற்பனை கடந்த மாதம் 7,...
காலநிலை மாற்றம் தொடர்பில் இளையோர் ஒன்றிணையும் சர்வதேச நிகழ்வு யாழ்ப்பாண நகரத்தில் இரண்டாவது வருடமாக 13.11.2020 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு இணைய வழியில் திருக்குறள் மற்றும் தமிழ் மொழி வாழ்த்துடன் ஆரம்பமாகியது. இம்முறை Covid - 19 பரவல் காரணமாக முற்றுமுழுதாக இணையவெளியூடாகவே நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. கிளைமத்தோன் நிகழ்வு தொடர்பிலான அறிமுகவுரையினை நிகழ்வு ஒருங்கிணைப்பு...
இலங்கையின் தலைநகர் கொழும்பில் வைத்து 2006 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாளை 10.11.2020) காலை 09.30 மணிக்கு சாவகச்சேரி நகரில் உள்ள ரவிராஜ்...
2,395FansLike
117FollowersFollow
585SubscribersSubscribe
- Advertisement -

தொழிநுட்பம்