Home பன்னாட்டுச் செய்திகள்

பன்னாட்டுச் செய்திகள்

உலகப் புகழ்பெற்ற ஸ்டார் ட்ரெக் தொலைக்காட்சித் தொடரில் நடித்த வில்லியம் சாட்னர் விண்வெளிக்கு அதிகூடிய வயதில் சென்ற மனிதர் என்ற சாதனையைத் தனதாக்கியுள்ளார். 90 வயதான சாட்னரை தாங்கிச் சென்ற என்.எஸ்-18 என்ற விண்வெளி ஓடம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள ப்ளூ ஒரிஜின் பிரதேசத்தில் இன்று(13) வெற்றிகரமாகத் தரையிறங்கியதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. விண்வெளிக்குச் சுற்றுலா சென்ற...
பாகிஸ்தானின் தெற்கே பலூசிஸ்தான் மாகாணம் பகுதியில் இன்று(07.10.2021) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆகப் பதிவாகியுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த நிலநடுக்கத்தால் 20 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்டத் தகவல்கள் கூறுகின்றன. இன்று அதிகாலை-03.30 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது கூரைகளும், சுவர்களும்...
உலகளாவிய ரீதியில் சுமார்-6 மணி நேரத்திற்குப் பின்னர் பேஸ்புக், வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஆகிய சமூகவலைத் தளங்கள் மீளச் செயற்பட ஆரம்பித்துள்ளன. உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான பயனர்கள் உபயோகப்படுத்தும் மேற்படி செயலிகள் நேற்றிரவு (04.10.2021) செயலிழந்தன. எனினும் அவை செயலிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சர்வதேச ரீதியில் குறித்த தடையானது இதுவரை கண்டிராத மிகப்பெரிய தோல்வியெனச் செயலிகளின்...
உலகளாவிய ரீதியில் பேஸ்புக், மெசஞ்சர், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத் தளங்கள் இன்று திங்கட்கிழமை (04.10.2021) இரவு செயலிழந்துள்ளன. இலங்கை நேரப்படி இன்று இரவு-09.15 மணி முதல் இந்தச் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், இதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இதேவேளை, விரைவில் மேற்படி சமூகவலைத் தளங்கள் வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பேஸ்புக் நிறுவனம்...
தமிழர் தாயகத்தின் புகழ்பூத்த சங்கீத வித்துவானும், தமிழர் தாயகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த பாடல்களைப் பாடியவருமான கலாபூசணம் சங்கீதரத்தினம் வர்ண ராமேஸ்வரன் நேற்றுச் சனிக்கிழமை(25.09.2021) கொரோனாத் தொற்றுக் காரணமாக கனடா ரொறோன்ரோ மருத்துமனையில் உயிரிழந்தார். யாழ்.அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட வர்ண ராமேஸ்வரன் ஆரம்பக் கல்வியை அளவெட்டி சீனன் கோட்டை ஞானோதய வித்தியாசாலையிலும், உயர்கல்வியைத் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியிலும்...
அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகருக்கு அருகே நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோளில் 6.0 மெக்னிடியூட்டாக இந்த நில அதிர்வு பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கிழக்கு மெல்பர்னின் மென்ஸ்ஃபில்ட் நகருக்கு அருகில் அந்நாட்டு நேரப்படி இன்று (22) காலை- 9.15 மணியளவில் இந்த நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. சிட்னி, விக்டோரியா, கன்பெரா, தஸ்மேனியா மற்றும் நியூசவுத்வேல்ஸ் முதலான...
கனடாவில் நடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்ட இலங்கைத் தமிழரான ஹரி ஆனந்த சங்கரி பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார். பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சியில் Scarborough-Rouge Park தொகுதியில் போட்டியிட்ட ஹரி ஆனந்த சங்கரி 16,051 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட கொன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் Zia Choudhary ஐ தோற்கடித்து வெற்றி...
கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக ஏனைய நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை அமெரிக்கா அரசாங்கம் நிபந்தனையுடன் நீக்கியுள்ளது. இதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் தொடக்கம் அனைத்து நாடுகளிலும் உள்ள பயணிகள் அமெரிக்காவுக்குள் பிரவேசிக்க முடியும். இதேவேளை,நாட்டிற்கு வருகை தரும் பயணிகள் இரு கொரோனாத் தடுப்பூசிகளையும் செலுத்தியிருக்க வேண்டும் என அமெரிக்க அரசாங்கம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
காபூல் விமான நிலையத்தை நோக்கி வெடிகுண்டுகளுடன் புறப்படவிருந்த ஐ.எஸ்.கே தற்கொலைப்படைத் தீவிரவாதிகளின் கார் மீது ட்ரோன் மூலம் அமெரிக்கா மற்றொரு அதிரடித் தாக்குதலை நடாத்தியுள்ளது. சம்பவத்தில் குறித்த கார் வெடித்துச் சிதறியதுடன் அதிலிருந்த வெடிகுண்டுகளும். பயங்கரச் சத்தத்துடன் வெடித்தன. இதனால் அப் பகுதி முழுவதும் கரும்புகை எழுந்தது. இந்தச் சம்பவத்தில் கார் வெடித்துச்...
ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் ஆப்கானிஸ்தான் கிளையான கோரேசன் தீவிரவாத முகாம்கள் மீது அமெரிக்கா ஆளில்லா டிரோன்கள் மூலம் நேற்று நள்ளிரவு வேளையில் ஆப்கானிஸ்தானில் குண்டுவீசித் தாக்குதல் நடாத்தியுள்ளது. குறித்த தாக்குதலில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த இரட்டைக் குண்டு வெடிப்புக்களுக்குச் சதித் திட்டம் தீட்டிய முக்கிய தீவிரவாதி கொல்லப்பட்டதாக பென்டகன் அறிவித்துள்ளது. காபூலில் மேலும் குண்டுவெடிப்பு...
2,395FansLike
117FollowersFollow
585SubscribersSubscribe
- Advertisement -

தொழிநுட்பம்