Home பன்னாட்டுச் செய்திகள்

பன்னாட்டுச் செய்திகள்

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே இன்று சற்றுமுன்னர் உயிரிழந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜப்பானின் நாரா நகரில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் மர்ம நபரால் துப்பாக்கியால் சுடப்பட்ட அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 2012 ஆம் ஆண்டு ஜப்பானின் பிரதமராகப் பதவியேற்ற ஷின்சோ அபே நாட்டின் வரலாற்றில் நீண்டகாலம்...
பிரான்ஸ் நாட்டில் தமிழர்கள் அதிகமாக வாழும் லாச்சப் நகரில் தமிழ்த்தேசியப் பண்பாட்டுப் பேரவையால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. https://youtu.be/LL-dLuChpWo தமிழ்த்தேசியப் பண்பாட்டுப் பேரவையின் பிரான்ஸ் நாட்டு பிரதம அமைப்பாளர் நடராஜா ரவிவர்மாவின் வழிநடத்தலில் இச் செயற்பாடுகள் இடம்பெற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. (செ.ரவிசாந்)
Continuing Cycles of Violence and Genocide in SriLanka ஆவணத் திரைப்படம் நாளை(27/04/2022) மாலை-6.30 மணியளவில் பிரித்தானியப் பாராளுமன்றத்தில் பிரித்தானியத் தமிழர் பேரவையினரால் வெளியிடப்படவுள்ளது. சிறிலங்கா பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் அடைந்த நாள் முதல் சிறிலங்கா இனவாத அரசினால் தமிழர்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் வன்முறை சுழற்சி (Cycles of Violence) மற்றும் இன...
கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற வேண்டிய 70 ஆவது உலக அழகிப் போட்டி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று இடம்பெற்றது. குறித்த போட்டி நிகழ்ச்சி போர்ட்டோ ரிகாவின் சான் ஜுவான் எனும் இடத்தில் உள்ள கோகோ கோலா மியூசிக் ஹாலில் கோலாகலமாக நடைபெற்றது. பல நாடுகளைச் சேர்ந்த அழகிகள் குறித்த...
அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள திக்லிபூர் பகுதியில் இன்று காலை 8.58 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 அலகுகளாகப் பதிவானது. திக்லிபூரில் இருந்து தென் கிழக்கே 225 கிலோமீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, மேற்படி நிலநடுக்கம் காரணமாக உயிரிழப்போ அல்லது உடமைகள் சேதமோ ஏற்பட்டதாக...
கடந்த ஒன்பது நாட்களாகத் தொடர்ந்து இடம்பெற்று வந்த உக்ரைன் மீதான போர் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் இணைந்தால் அது தனது நாட்டிற்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனக் கருதிய ரஷ்யா கடந்த மாதம்-24 ஆம் திகதி அந்த நாட்டின் மீது போரைத் தொடங்கியது. உக்ரைன் மீது சரமாரியாக...
உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஷேன் வோர்ன் திடீர் மாரடைப்பால் தனது 52 ஆவது வயதில் இன்று(4) காலமானார். அவர் தாய்லாந்துக்குச் சுற்றுலா சென்றிருந்த நிலையில் தாய்லாந்தில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கியிருந்தபோது ​​​அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 1969 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம்-13 ஆம் திகதி அவுஸ்திரேலி...
2022 ஆண்டு புத்தாண்டை வரவேற்க உலகம் முழுவதும் மக்கள் தயாராகி வரும் நிலையில் நிலையில் நியூசிலாந்தில் முதலாவதாக 2022 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறந்தது. அங்குள்ள மக்கள் உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்றனர். பூமிப் பந்தின் ஒரு முனையில் பகலாக இருக்கும் போது மறுமுனையில் இரவாக இருக்கும். அந்த வகையில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நியூசிலாந்து...
இந்தோனேஷியாவின் மௌமரே பகுதியிலிருந்து 95 கிலோ மீற்றர் வடக்கே இன்று செவ்வாய்க்கிழமை(14.12.2021)சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆகப் பதிவாகி உள்ளது. இதன் எதிரொலியாக கடலில் சுனாமி அலைகள் எழ வாய்ப்பு உள்ளதாகப் பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமையால் பாதிப்புக்கள் அதிகமாகவிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இதேவேளை, இந்தோனேஷியாவின்...
கொரோனா வைரஸின் ஒமிக்ரொன் திரிபினால் பாதிக்கப்பட்ட ஒருவர் பிரித்தானியாவில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் உறுதிப்படுத்தியுள்ளார். ஒமிக்ரொன் திரிபினால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்த சம்பவம் பதிவான முதல் சந்தர்ப்பம் இதுவாகும். பிரித்தானியாவில் கடந்த-27 ஆம் திகதி முதல் ஒமிக்ரொன் திரிபினால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டனர்.அந் நாட்டில் அதிக வேகத்தில் ஒமிக்ரொன் திரிபு பரவி வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
2,395FansLike
117FollowersFollow
585SubscribersSubscribe
- Advertisement -

தொழிநுட்பம்