பன்னாட்டுச் செய்திகள்

''இந்தியாவில் தயாரிக்கப்படும், மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்தால், குழந்தைகள் இடையே கொரோனா தொற்று பரவலை எளிதாக கட்டுப்படுத்த முடியும்,'' என, உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி, டாக்டர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்தார். கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலையில், 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு...
கனடா நாட்டின் ரொறன்ரோ தமிழ் இருக்கைச் செயற்றிட்டத்தைச் செயற்படுத்துவதற்கான $3,000,000 என்ற குறிக்கோள் தொகையை எட்டிவிட்டோம் என்ற செய்தியைத் தெரியப்படுத்துவதில் பெருமகிழ்ச்சி அடைவதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மேத் திங்கள் 2018, கனடாவில் முதலாவது தமிழ் இருக்கையை நிறுவுவதற்காக, கனடியத் தமிழர் பேரவையும், தமிழ் இருக்கை அமைப்பும் இணைந்து, ரொறன்ரோ பல்கலைக்கழகத்தோடு...
மீண்டும் வேகமாக பரவ தொடங்கியிருக்கும் புதிய கொரோனா வைரஸ் எதிரொலியாக பிரித்தானியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 56 மில்லியன் மக்கள் மீண்டும் பொது முடக்கத்தை எதிர்கொண்டுள்ளனர். 2019 இல் சீனாவிலிருந்து உலக நாடுகளுக்கு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உருமாற்றம் பெற்று பிரித்தானியாவில் அதிவேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில்...
புவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில், முள்ளங்கியை நாசா வெற்றிகரமாக வளர்த்துள்ளது. சந்திரன் மற்றும் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் உள்ளதால், எதிர்கால விண்வெளி வீரர்களுக்கு புதியதான உணவை அளிக்கும் திட்டத்துடன் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. செடிகள் வேர் விடுவதற்கு அத்தியாவசியமான புவியீர்ப்பு சக்தி இல்லாததால், தலையணை போன்ற வடிவமைப்பு ஒன்றில் உரம்...
சர்வதேசத்தின் தலைசிறந்த கால்பந்தாட்ட ஜாம்பவான் மரடோனா மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 60. உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள டீயாகோ மரடோனா அண்மையில் தான் மூளையில் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார். இதற்காக 8 நாட்கள் அர்ஜெண்டினா தலைநகர் பியூனோ ஏர்ஸில் உள்ள பிரபல மருத்துவமனையில் உள்நோயாளியாக அவர் சிகிச்சை பெற்று வந்தார்....
காலநிலை மாற்றம் தொடர்பில் இளையோர் ஒன்றிணையும் சர்வதேச நிகழ்வு யாழ்ப்பாண நகரத்தில் இரண்டாவது வருடமாக 13.11.2020 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு இணைய வழியில் திருக்குறள் மற்றும் தமிழ் மொழி வாழ்த்துடன் ஆரம்பமாகியது. இம்முறை Covid - 19 பரவல் காரணமாக முற்றுமுழுதாக இணையவெளியூடாகவே நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. கிளைமத்தோன் நிகழ்வு தொடர்பிலான அறிமுகவுரையினை நிகழ்வு ஒருங்கிணைப்பு...
காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்களாகிய நாங்கள், உங்கள் கவனத்தையும் எங்கள் கடினமான போராட்டத்திற்கு ஒரு ஆறுதலையும் கேட்கிறோம். நன்கு அனுபவம் வாய்ந்த, பரிவுணர்வுள்ள ஒருவர் சுதந்திர உலகின் தலைவராக இருப்பதற்காக தாங்கள் காத்திருந்ததாக தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடனுக்கு வாழ்த்துத் தெரிவித்து...
அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதியாகும் முதல் கறுப்பின மற்றும் ஆசிய - அமெரிக்க பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹரிஸ். 55 வயதாகும் கமலா ஹரிஸின் தாய் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர். கமலா ஹரிஸின் தாய் தமிழகத்தைச் சேர்ந்தவர். உறவினர்கள் சென்னையில் வசிக்கிறார்கள். இவர்களின் பூர்வீகம்...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நீண்ட இழுப்பாடுகளுக்கு மத்தியில் முடிவுக்கு வந்து உள்ளது. அமெரிக்காவின், 46 ஆவது ஜனாதிபதியாக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன், 77, தெரிவாகியுள்ளார். "என்னை அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்த நாட்டு மக்களுக்கு நன்றி" என ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில் நன்றி...
  உலகளவில் இன்றைய நிலவரப்படி கொரோனாவால் 4 கோடியே 64 லட்சத்து 40 ஆயிரத்து 163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 லட்சத்து ஆயிரத்து 123 பேர் பலியாகி உள்ளனர். 3 கோடியே 35 லட்சத்து 28 ஆயிரத்து 971 பேர் மீண்டுள்ளனர். மீண்டும் உலகெங்கும் கொரோனா பரவல் அதிகரித்து வருகின்றது. பிரான்ஸ் நாட்டை தொடர்ந்து பிரித்தானியாவிலும் ஊரடங்கு...
2,395FansLike
117FollowersFollow
585SubscribersSubscribe
- Advertisement -

தொழிநுட்பம்