Home யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் மீண்டும் இரத்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இரத்ததானம் செய்யக் கூடியவர்கள் அருகிலுள்ள இரத்த வங்கிக்கு சமூகம் கொடுத்து இரத்ததானம் செய்து உயிர்காக்கும் பணிக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம். என யாழ். போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியினர் கேட்டுக் கொண்டுள்ளனர். தொடர்புகளுக்கு 0772105375
வடமாகாணத்தின் பிரதான மார்க்கங்களில் திருத்த மற்றும் பராமரிப்பு பணிகளிற்காக நாளை (10) சனிக்கிழமை மின்சாரம் துண்டிக்கப்படும் பிரதேசங்களின் விபரங்களை இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதன்படி, யாழ் மாவட்டத்தில்- ஏ.வி.வீதி கொழும்புத்துறை, கொழும்புத்துறை வீதி- நெளுக்குளம் வீதி, கொழும்புத்துறை வீதி சுவாமியார் சந்தி, மணியந்தோட்டம், பழைய பூங்கா வீதி, கொழும்புத்துறை...
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான கொடூரங்களுக்கு 12 வருடங்கள் கடந்தும் நீதி பெற்றுக்கொடுக்க முடியாத துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கவலை வெளியிட்டுள்ளது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட தமக்கு நீதி கிடைக்கும் என்பதை தமிழ் மக்கள் நம்பவில்லை என,...
மறைந்த ஈழத்து எழுத்தாளர் டொமினிக் ஜீவா தொகுப்பு நூல் வெளியீடும் நினைவுப் பகிர்வும் நாளை ஞாயிறு மாலை 7 மணிக்கு Zoom கலந்துரையாடலாக இடம்பெறவுள்ளது. இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி (பிரான்ஸ்) ஒழுங்கு செய்யும் இந்த நிகழ்வுக்கு தேவதாசன் தலைமை தாங்குகிறார். நினைவு உரைகளை டொமினிக் ஜீவாவின் மகன் திலீபன் டொமினிக், மூத்த எழுத்தாளர்...
யாழ்ப்பாணம் கோண்டாவில் செல்வபுரம் பகுதியில் நேற்றிரவு வாள்வெட்டுக்கு இலக்காகி ஒருவரின் துண்டிக்கப்பட்ட கை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ வல்லுநர்கள், மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ சேவையாளர்களின் கூட்டு முயற்சியினால் பொருத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சத்திரசிகிச்சை கூடத்தில் நேற்றிரவு 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட சத்திரசிகிச்சை இன்று அதிகாலை 4 மணிக்கு வெற்றிகரமாக நிறைவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. யாழ்ப்பாணம்...
யாழ்ப்பாண பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தில் 2019/2020 ஆம் கல்வியாண்டில் சுற்றுலாத்துறையும், விருந்தோம்பலும் கற்கைநெறிக்கு முதன்முதலாக மாணவர்கள் உள்வாங்கப்படவிருக்கின்றனர். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ. த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து, யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட வியாபார நிருவாகமாணி, வணிகமாணி புதுமுக மாணவர்களுடன் சுற்றுலாத்துறையும், விருந்தோம்பலும் கற்கை நெறியும்...
யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி - வதிரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று மாலை மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளம் குடும்பஸ்தர்கள், வதிரி அமெரிக்க மிசன் பாடசாலைக்கு அருகிலுள்ள ஐமூலை வளைவில் நிதானமிழந்து, மின் கம்பத்துடன் மோதி...
யாழ்ப்பாண மாவட்டம் - வலிகாமம் வடக்கு பிரதேசத்தின் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் இந்த வருடம் நிர்மாணிப்பதென திட்டமிடப்பட்ட அதி தீவிர சிகிச்சைப் பிரிவானது வட மாகாண பிரதம செயலாளர் அவர்களின் தலையீட்டினால் நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது என்று குறிப்பிட்டு குறித்த நடவடிக்கை தொடர்பில் அதிருப்தியைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டு...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தினால் நடாத்தப்படுகின்ற நுண்நிதி தகமைச் சான்றிதழ் (Diploma in Micro Finance) கற்கை நெறியின் நான்காம் அணியின் அறிமுக நிகழ்வு 19 ஆம் திகதி சனிக்கிழமை இணைய வழியாக நிகழ்நிலையில் இடம்பெற்றது. திருநெல்வேலி, பால் பண்ணை வீதியில் அமைந்துள்ள வணிக முகாமைத்துவ பீடத்தில், பீடாதிபதி பேராசிரியர் பா. நிமலதாசன்...
வாகன குத்தகைக் கட்டணத்தை செலுத்த முடியாத நெருக்கடி, குடும்பத்தகராறு காரணமாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார். வடமராட்சி கிழக்கு உடுத்துறை ஆழியவளையைச் சேர்ந்த முன்னாள் போராளியான சிவலிங்கம் சிவதரன் (34) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு நேற்று (06) தவறான முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார். அண்மைய நாட்களாக அவரது மனைவி...
2,395FansLike
117FollowersFollow
585SubscribersSubscribe
- Advertisement -

தொழிநுட்பம்