ஆலயங்கள் அறச்சாலைகளாக மாற வேண்டும் என்ற பெருநோக்குடன் வாழ்ந்து காட்டிய பெருந்தகை!

ஆலயங்கள் வெறும் வழிபாட்டு நிலையமல்லாமல் அறச்சாலைகளாகவும் மாறவேண்டும் என்ற பெருநோக்கோடு வாழ்ந்து காட்டிய பெருந்தகை சிவத்தமிழ்ச்செல்வி அம்மையார் காலத்தில் நானும் வாழ்ந்ததில் பெருமை கொள்கின்றேன்.

"நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்"  

நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும் என்ற குறளுக்கமைய அம்மையார் அவர்களின் திருமொழி வாக்குகள் எம்மை வாழவைக்கும். 

அம்மையாரின் ஆத்மா எல்லாம் வல்ல துர்க்காதேவியின்  திருவடி நிழலில் சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன்.  

சிவஸ்ரீ க.செந்தில்ராஜக் குருக்கள்
(தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத்தின் பிரதமகுரு)