கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ விரத உற்சவம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரர் ஆலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை (12.06.2026) மாலை பிரதோஷ விரத உற்சவம் பக்திபூர்வமாக இடம்பெறவுள்ளது.  

இன்று மாலை-04 மணியளவில் சிறப்பு அபிஷேக வழிபாடுகள் ஆரம்பமாகி அதனைத் தொடர்ந்து சிறப்புப் பூஜை வழிபாடுகள் இடம்பெறும். வசந்த மண்டபப் பூஜையைத் தொடர்ந்து நகுலேஸ்வரப் பெருமான் தேவி சமேதரராக உள்வீதி உலா வரும் திருக்காட்சி இடம்பெறும்.