பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்கிற  பிள்ளையானை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம்-04 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் இன்று வெள்ளிக்கிழமை (24.07.2026) உத்தரவிட்டுள்ளார்.

ஐந்து கொலைகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்களின் கீழ் கைதான பிள்ளையான் இன்றைய தினம் நிகழ்நிலை ஊடாக மட்டக்களப்பு நீதிமன்ற விசாரணைக்காக ஆஜரான போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.