'அலங்காரக் கந்தன்' எனும் நாமத்துடன் அருளாட்சி புரியும் வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந் திருவிழாவின் பத்தாம் திருவிழாவான திருமஞ்சத் திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை (18.08.2024) மாலை வெகுசிறப்பாக இடம்பெற்றது.
பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் திருமஞ்சத் திருவிழாவில் கலந்து கொண்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.