சமூக விஞ்ஞானப் படிப்பு வட்டத்தின் ஏற்பாட்டில் தேர்தல்களும் தீர்வுகளும் தீர்வின்றித் தொடரும் மக்கள் பிரச்சினைகளும் எனும் தொனிப் பொருளிலான கருத்துரையும் கலந்துரையாடலும் நாளை திங்கட்கிழமை (19.08.2024) மாலை-04 மணி முதல் கொக்குவில் சந்திக்கு அருகில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
ஓய்வுநிலைப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி.முத்துலிங்கம் தலைமையில் இடம்பெறவுள்ள குறித்த நிகழ்வில் ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் மு.அநாதரட்சகன் கலந்து கொண்டு கருத்துரை ஆற்றுவார். அதனைத் தொடர்ந்து திறந்த கலந்துரையாடலும் நடைபெறும். நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு சமூக விஞ்ஞானப் படிப்பு வட்டத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.